தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏழரை சனியிலும் மேஷ ராசிக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா.. முழு பலன்கள் விவரம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 ஆம் நாளான தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு மாற்றம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டில் மேஷம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷம் ராசியினருக்கு ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் விநாயகர், அனுமன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல மாற்றம் ஏற்படும். இதுவரை இந்த விஷயங்களில் பாதிப்புகளைச் சந்தித்து வந்தீர்களோ அந்த நிலைமைகள் எல்லாம் மாறும். அற்புதமான மாற்றம் ஏற்படும். சுப விரயங்கள் ஏற்படும்.

வீடு கட்டும் யோகம்
வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, வீட்டை புதுப்பிப்பது, இன்டீரியர்களை மாற்றுவது, அலுவலகத்தை மாற்றுவது, கூடுதல் பட்டங்களை வாங்குவது, மேற்படிப்புகளை படிப்பது போன்ற யோகம் உண்டாடும். கூடுதலாக மேற்படிப்புகளை படிப்பீர்கள். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். ராகு உங்களுக்கு நிறைய உதவிகளை செய்வார். 11 ஆம் இடத்தில் இருப்பது திடீர் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள்.
சுபகாரியங்கள்
லாட்டரியில் ஜாக்பாட் அடிக்கும் யோகம் உண்டு. பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். எதிரிகள் விலகுவார்கள். எதிரிகள் உங்களை வந்து சரணடைவார்கள். வழக்குகளில் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். ஜூன் மாதத்திற்கு சுபகாரியங்கள் நடக்கும் அமைப்பு உள்ளது. எல்லா விதமான அனுகூலமும் ஏற்படும்.
பயணங்கள்
குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லது, விடுபட்ட யாத்திரகைள் செல்வது, தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து கஷ்டப்பட்டவர்கள் மீண்டும் குடும்பத்தினருடன் ஒன்று சேரக்கூடிய வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மனதில் இருந்து வந்த ஆசைகள் எல்லாமே நிறைவேறும்.
நல்ல மாற்றங்கள்
பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இடையே பாசம் அதிகரிக்கும், அந்நியோன்யம் ஏற்படும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடலைப் படிப்பது, கேட்பது பெரிய பலம் ஏற்படும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் ஏற்படும். சொந்த தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும்.
பணவரவு
மீடியாவில் நற்பெயர் கிடைக்கும். யூடியூப், சேனல் போன்றவற்றில் வெற்றி பெறுவது, விருது பெறுவது, அங்கீகாரம் கிடைக்கும் யோகம் உண்டாகும். தேர்தல் களத்தில் பெரிய பங்காற்றுவீர்கள். தேர்தலில் திடீர் அதிர்ஷ்டம், வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எல்லாவிதமான நன்மைகளும் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும்.
கடன் தீரும்
திட்டமிட்டு அனைத்து காரியங்களையும் செய்வீர்கள். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தினந்தோறும் அனுமன் சாலிஷா கேட்பது நன்மையைத் தரும். ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சியை மேற்கொள்வது நன்மை பயக்கும். அடிவயிறு, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
-
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications