தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அடித்தாடும் மிதுன ராசி.. தடைகள் தவிடுபொடியாகும்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 ஆம் நாளான தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு மாற்றம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டில் மிதுன ராசியினருக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களையும், அசுப பலன்களையும் ஏற்படுத்தும். ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு சனி மற்றும் குருவின் திரிகோண சேர்க்கையுடன் ஏற்பட்டுள்ளது.

இந்த கிரக நிலையானது 12 ராசிக்காரர்களுக்கும் பல நல்ல மாற்றங்களையும், சவால்களையும் கொண்டுவர உள்ளது. சில ராசிகளுக்கு யோக பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)
மிதுன ராசியினருக்கு ஜூன் மாதம் 14 ஆம் தேதிக்குப் பிறகு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. பழைய கடன்கள் தீரும் நல்ல காலகட்டம். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டம். தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பில் இருந்து வந்தி பாதிப்புகள், தடைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும்.
ஆரோக்கியம்
நிறைய மிதுன ராசியினர் தாய்நாட்டிற்கு திரும்பி வருவீர்கள். இங்கு வந்த பின்னர் நிறைய நன்மைகள் உங்களுக்கு நடக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் எல்லாம் நீங்கும். மருத்துவமனையில் அனுமதியாக குணமடைவீர்கள். பயந்து போயிருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். யாருக்காகவும் பயப்படாமல் நிம்மதியாக இருப்பீர்கள்.
கடன் தீரும்
பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கடன்களை அடைத்து முடிக்கும் முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். கடன்காரர்களை நினைத்து, செல்போனில் அழைப்பு வந்தாலே பயந்துபோயிருந்த நிலைமை எல்லாம் மாறும். அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். நிறைய யோக பலன்கள் கிடைக்கும் காலகட்டம்.
முன்னேற்றம்
தொழில் மாற்றங்கள் வந்தால் ஏற்றுக் கொள்வது நல்லது. படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் இருந்து சொந்தமாக தனி தொழில் தொடங்குவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் அமைப்பு உள்ளது. அரசு சார்ந்த கெளரவம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும்.
வழிபாடு
தொண்டை, காது, மூக்கு, சைனஸ் தொடர்பான பாதிப்புகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 24 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயம் தொடர்பான பரிசோதனை செய்து கொள்வது நன்மை பயக்கும். பட்டீஸ்வரம் சென்று வழிபாடு செய்வது, துர்க்கை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். மாதம்தோறும் திங்கள்கிழமையில் சிவன் வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications