தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு டும் டும் டும் கன்ஃபார்ம்.. காதல் வாழ்க்கை இனிக்கும்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 ஆம் நாளான தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு மாற்றம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டில் ரிஷபம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களையும், அசுப பலன்களையும் ஏற்படுத்தும். ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு சனி மற்றும் குருவின் திரிகோண சேர்க்கையுடன் ஏற்பட்டுள்ளது.

இந்த கிரக நிலையானது 12 ராசிக்காரர்களுக்கும் பல நல்ல மாற்றங்களையும், சவால்களையும் கொண்டுவர உள்ளது. சில ராசிகளுக்கு யோக பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் ரிஷபம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷப ராசியினருக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். வாக்கியப்படி சனி இரண்டரை வருடமும், திருக்கணிதப்படி சனி பகவான் ஒன்றரை வருடமும் இருப்பதால் நிறைய லாபங்கள் கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் பெரியவர்கள் விஷயங்கள் தடைபட்ட விஷயங்கள், பரம்பரையாக இருக்கக்கூடிய தொழில்களை நீங்கள் எடுத்து செய்யக்கூடிய அமைப்பு ஏற்படும்.
திருமண யோகம்
அற்புதமான காலகட்டமாக இருக்கும். திருமணம் நடக்கும் காலகட்டம். திருமணத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும். இந்த பராபவ ஆண்டுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வது நல்லது. செட்டிலாகி விட்டு செய்து கொள்ளலாம் என்று கூறி திருமணத்தை தள்ளிப் போடாமல் இருப்பது நல்லது. காதல் கைகூடும். காதலில் வெற்றி பெறக்கூடிய அமைப்பு உள்ளது.
வீடு கட்டும் யோகம்
அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கக்கூடிய நல்ல காலகட்டம். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்டும். நிறைய லாபம் ஏற்படும். நகை வாங்கும் யோகம் உண்டு. ஆடை ஆபரணங்களை வாங்கி குவிப்பீர்கள். வீடு கட்டுவது, இன்டீரியர் செய்வது, பெரிய பெரிய விஷயங்களைச் செய்வது, முதலீடுகள் செய்வது, பெரிய பொறுப்புகளுக்கு வருவது போன்ற யோகம் உண்டாகும்.
அனுகூலம்
அரசியலில் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். வண்டி வாகனங்களை மாற்றுவீர்கள். உங்களுக்குப் பிடித்தமான வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமான வரி கட்டுவது, ஜிஎஸ்டி கட்டுவது போன்றவற்றை செய்வீர்கள். தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. துணையின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.
வழிபாடு
ஆசைகள் நிறைவேறும் காலகட்டம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் பெருகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரிஷப ராசியினர் ஒருமுறை ஸ்ரீரங்கம் சென்று வருவது நன்மை பயக்கும். மாதத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு தாமரை மலர் கொடுத்து வழிபாடு செய்வது நன்மை பயக்கும். முதுகுத்தண்டுவடம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications