தமிழ் புத்தாண்டு பலன்: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. மிதுன ராசிக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் இந்த பராபவ ஆண்டில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டில் வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சொந்த தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும் அமைப்பு உள்ளது. வருமானம் அதிகரிக்கும். நீங்கள் வைத்திருக்கும் பொருள் உங்களுக்கு பிரயோஜனமாகும். திருமண யோகம் உண்டாகும். திருமணத்தை தள்ளிப் போடாமல் இருப்பது நல்லது. நல்ல வரன்கள் அமையக்கூடிய அமைப்பு உண்டு.

வெளிநாடு யோகம்
மேற்படிப்பு படிக்கும் அமைப்பு, வெளிநாட்டில் படிக்கும் அமைப்பு உள்ளது. நீங்கள் படிக்கும் படிப்புக்கேற்ற வேலை வெளிநாட்டில் கிடைக்கும். 10 மாதத்திற்குள் இதற்கான திட்டமிடலைச் செய்வது நன்மை பயக்கும். வந்து சேரக்கூடிய பணங்கள் வந்து சேரும். இதுவரை இருந்து வந்த பாதிப்புகள், ஏமாற்றங்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். 2 ஆம் இடத்தில் தன, குடும்ப ஸ்தானத்தில் குரு உச்சமடைவதால் உங்களை வேண்டாம் என்று சென்றவர்கள் மீண்டும் உங்களை வந்து சேரும் யோகம் உண்டாகும்.
ஆன்மிக பயணம்
உங்கள் மனதிற்குப் பிடித்த ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்ளும் அமைப்பு உள்ளது. பித்ருக்கள் ஆசிர்வாதம் நிறைந்த ஆண்டாக இருக்கும். முறையாக கர்ம காரியங்களை செய்தவர்களுக்கு நல்ல அமைப்பு உள்ளது. கர்ம காரியங்களை இதுவரை செய்யாதவர்கள் காசி சென்றுவிட்டு வருவது உங்களுடைய பாவங்களைப் போக்கும். பணவரவு நன்றாக இருக்கும். வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். இந்த ஆண்டை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
சவால்கள்
நிறைய சவால்களை கொடுக்கும் காலகட்டம். மிதுன ராசியினர் எந்த முடிவை எடுத்தாலும் நவம்பர் 13 ஆம் தேதிக்குள் எடுத்துக் கொள்வது நல்லது. சுபகாரியங்களை விரைந்து செய்து கொள்வது நன்மை பயக்கும். குருவின் பூரண பலன் கிடைக்கும். பலரது மன நோய்கள், தனிமைப்படுத்தப்பட்ட எண்ணங்கள் எல்லாம் தீரும்.
திருமண யோகம்
திருமண பாக்கியத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு திருமண வாழ்க்கையில் நல்ல வரன்கள் ஏற்படும். 6 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் மறைமுகமாக இருந்த போட்டி, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி எல்லாம் விலகும். 10 ஆவது வீட்டில் சனி பகவான் இருப்பதால் பட்டம், புகழ், ஜீவனம், பதவி, பெயர் கிடைக்கக்கூடிய அமைப்பு உள்ளது. 9 ஆவது வீட்டில் ராகு இருப்பதால் தந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. அவர் சொல்வதைக் கேட்டு மதித்து நடப்பது மேன்மையை ஏற்படுத்தும்.
வழிபாடு
உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனை நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள் தீரும். திருமணத் தடைகள் பரிபூரணமாக நீங்கும். மகளுக்குத் திருமணம் செய்யும் யோகம் உண்டாகும். பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். 9 ஆம் இடத்தில் ராகு இருப்பது வெளிநாடு யோகத்தை கொடுக்கும். நடராஜர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications