தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு மெகா ஜாக்பாட்.. அள்ள அள்ள தங்கம்.. நல்ல நேரம் ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் இந்த பராபவ ஆண்டில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

விருச்சிகம் (Viruchigam Rasi Palan)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகச்சிறந்த பலன்கள் கிடைக்கும். யாரெல்லாம் இதற்கு முன்பு உங்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்களோ அவர்களை நீங்கள் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். கடந்த சில ஆண்டுகளாக பல பிரச்சனைகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இனி உங்களுக்கு உதவியவர்களுக்கு எல்லாம் நல்லது செய்யும் அமைப்பு உண்டாகும்.

tamil-puthandu-rasi-palan-tamil-puthandu-rasi-palan-for-viruchigam-scorpio-zodiac-sign

மிகச்சிறந்த நல்ல பலன்கள் கிடைக்கும். முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். புதிய அறக்கட்டளை தொடங்குவது, கோயில் திருப்பணிகளைச் செய்வது போன்ற அமைப்பு உள்ளது. வீட்டில் நிறைய நன்மைகள் நடக்கும். சுற்றியிருப்பவர்களின் கஷ்டங்களைத் தீர்த்து வைப்பீர்கள். பிள்ளைகளை நன்றாக படிக்க வைப்பது, அவர்களுக்கு நல்லவை செய்து கொடுக்கும் யோகம் உண்டாகும்.

குரு பகவான்

ஆண்டு தொடக்கத்திலேயே குரு பகவான் சஞ்சரிப்பதால் அற்புதமான யோகமான அமைப்பாகும். எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. வேலை, தொழில், குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். நல்ல வரன் கிடைக்கும். வைகாசி மாதத்திற்குப் பிறகு புதிய தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.

வைகாசி 13

நிறைய ஆற்றல்கள் இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் இருந்திருப்பீர்கள். அதில் இருந்து வந்த தடைகள் எல்லாம் நீங்கும். புலம்பல்கள் எல்லாம் தீரும். வைகாசி 13 ஆம் தேதிக்குப் பிறகு அனைத்து சுபகாரியங்களையும் நீங்கள் செய்யலாம். 5 இல் சனி வந்திருப்பதால் பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. 10 இல் கேது இருப்பதால் வேலை, தொழில் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும்.

கவனம்

கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். செவ்வாய், சனியின் சேர்க்கை இருப்பதால் உங்கள் ஒழுக்கம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. நிறைய அரசு வேலைகள் கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் விஆர்எஸ் வாங்கும் எண்ணம் தோன்றும். வெளிநாட்டுக்குச் செல்லும் யோகம், வெளிநாட்டில் சம்பாதிப்பது, மல்டிநேஷல் கம்பெனியில் வேலை கிடைப்பது போன்ற யோகம் உண்டாகும். விசா கிடைப்பதில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

குழந்தை பாக்கியம்

தாய், தந்தையினருக்கு பக்கபலமாக இருப்பீர்கள். நல்ல உயர்ந்த வாழ்க்கை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நிறைந்த நல்ல செய்திகள் கிடைக்கும். பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மருத்துவத் துறையில் புகழ் பெறக்கூடிய ஆண்டாக இருக்கும். ஸ்ரீரங்கம் பெருமாளைச் சென்று வழிபாடு செய்வது, காவல் தெய்வங்களை வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.

வாய்ப்பு

விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான ஆண்டாக இருக்கும். அரசாங்க வேலைக்கான முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். உலகப் புகழ்பெறும் யோகம் உண்டு. விஞ்ஞானிகளுக்கு தேசிய விருது போன்றவை கிடைக்கும் ஆண்டாக இருக்கும். கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+