Viruchigam: அடித்தாடப் போகும் விருச்சிக ராசி.. தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: சித்திரை 1 வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த தமிழ் புத்தாண்டில் விருச்சிகம் ராசியினருக்கு ஏற்படப் போகும் நன்மைகள், படிப்பு, தொழில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)
விருச்சிக ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு டாப் கிளாஸ் யோகம் தரும் மாதமாக இருக்கும். கோயில் கட்டுவது, வீடு கட்டுவது, தொழில் அமைவது, பூர்வீக தொழில் கிடைப்பது, எம்பஸியில் வேலை கிடைப்பது, நீதிபதியாவது, அலுவலகத்தில் கொண்டாடுவது போன்ற யோகங்கள் உண்டாகும். ஒரு இடத்தில் இல்லாமல் பல இடங்களில் இருக்கும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் கண்டிப்பாக குழந்தைகளுக்காக செலவு, மாற்றம் செய்வீர்கள். நிறைய பேருக்கு குடும்பம் அமையும்.

திருமண யோகம்
திருமணமாகும் யோகம் உண்டு. மறுமணத்திற்கான வாய்ப்பு ஏற்படும். குரு பார்வை ராசி, லக்னத்தில் இருப்பதால் பண வரவு சிறப்பாக இருக்கும். உங்களைப் பார்த்தாலே பணம் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வர வேண்டிய அரியர் பணங்கள் வந்து சேரும். வழக்குகளில் சிக்கியிருப்பவர்கள் அதிலிருந்து மீண்டு வரும் யோகம் உண்டு. அற்புதமான அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
யோகம் தரும் காலம்
இதுவரை அனுபவித்து வந்த கஷ்டமான நிலைமைகள் எல்லாம் தீரும். வாழ்க்கையை செட்டிலாக்கிக் கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். பாக்கியத்தில் குரு இருப்பதால் பெரிய அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அசாத்தியமான அதிர்ஷ்டம், தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். நிறைய பேர் வெளியூர், வெளிநாடு செல்வது, பிஆர் கிடைப்பது, கோல்டன் விசா வாங்குவதற்கான யோகம் உண்டாகும்.
வெற்றி மேல் வெற்றி
மாபெரும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். புதிய விஷயங்களை எடுத்துச் செய்வீர்கள். வீட்டில் நிறைய நன்மைகள் நடக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். மாபெரும் வெற்றி பெறும் யோகம் உண்டு. உங்களுடைய வேலை, லட்சியத்தை மட்டும் விட்டு விடாதீர்கள். யாராக இருந்தாலும் தைரியமாக நின்று ஜெயிக்கக்கூடிய யோகம் உண்டாகும். வாய்ப்பு உங்களைத் தேடி வரும்.
வெளிநாடு யோகம்
தெய்வ அனுக்கிரகம் முழுமையாக இருக்கம். பூர்வீகத்தில் முதலீடு செய்யும் யோகம் உண்டாகும். பூர்வீக நிலத்தில் முதலீடு செய்வீர்கள். கோயில் கட்டும் யோகம் உண்டு. ஆஸ்திரேலியாவில் செட்டிலாகும் யோகம் உண்டு. தேனியில் ரிசார்ட் கட்டும் வாய்ப்புள்ளது. வளர்ச்சியைக் கொடுக்கக்கூடிய அமைப்பு உள்ளது. பெரிய மாற்றம் ஏற்படும்.
பண வரவு
பண வரவு நன்றாக இருக்கும். மாணவர்களுக்குப் படிப்பு அற்புதமாக இருக்கும். நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். முன்னோர்கள் வழிபாடு செய்த தெய்வங்களை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். அப்பாவின் குலதெய்வத்தை வழிபாடு செய்வது நன்மையைத் தரும். ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள லட்சுமி பூவராக சுவாமியை வழிபாடு செய்வது நன்மையைப் பெற்றுத் தரும். 100க்கு 90 சதவீதம் நன்மைகள் நிறைந்த ஆண்டாக இருக்கும்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications