தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி..எந்த விஷயங்களில் கவனம் தேவை
தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2026: 2026 தமிழ் புத்தாண்டு, பராபவ வருடம் கடக ராசியினருக்கு எப்படி இருக்கும், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும், வழிபட வேண்டிய தெய்வம், தொழில் வளர்ச்சி, வேலை, திருமணம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

கடகம் (Kadagam)
கடக ராசியினருக்கு கடினமானா காலகட்டமாகத்தான் இருக்கும். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். அஷ்டமத்தில் ராகு, ஜென்மத்தில் குரு, 2 ஆம் இடத்தில் கேது இருப்பதால் எல்லா விஷயங்களிலும் ஒருவிதமான கஷ்டங்கள் இருக்கும். முடிந்தளவுக்கு கடவுள் வழிபாட்டை அதிகப்படுத்திக் கொள்வது நல்லது. உங்கள் வேலை உண்டு, நீங்கள் உண்டு என்றிருப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
பேச்சில் கவனம்
முகம் சார்ந்த பிரச்சனைகள் வரும் காலகட்டம். 8 இல் இருக்கும் ராகு ஒரு சில கெட்ட பெயர், அவமானத்தை தரக்கூடிய வாய்ப்புள்ளது. எந்தவொரு விஷயத்திலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அம்மன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். குடும்பம், நண்பர்கள், உறவு முறையில் இருப்பவர்கள் பேசும் வார்த்தையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்
வண்டி, வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. பெற்றோர் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பாதத்தில் அறுவை சிகிச்சைகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சியை கடைப்பிடிப்பது நல்லது. மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அவசரப்பட்டு வேலையை விடக் கூடாது. இன்னொரு வேலை கிடைத்த பிறகு வேலையை விடுவது நல்லது.
வாக்குவாதம் வேண்டாம்
கணவன், மனைவிக்கிடையே சண்டைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வாக்குவாதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் படிப்பு விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. விளையாட்டு விஷயத்தில் அவர்களுக்குத் தேவையானதை முன்கூட்டியே திட்டமிடுவது நன்மை பயக்கும். நீர்நிலைகளுக்கு அருகில் இருக்கக்கூடிய கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வது மேன்மையை ஏற்படுததும்.
ஆசைகள் நிறைவேறும்
ராசிக்கு 2 ஆம் இடத்தில் கேது பகவான் இருக்கிறார். ராசிக்குள் ஒரு மாதத்தில் குரு பகவான் வருகிறார். குரு உச்சம்பெறக்கூடிய ராசியாக இருப்பதால் ஆசைகள் எல்லாம் நிறைவேறக்கூடிய காலகட்டமாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர், புகழ் கிடைக்கும். சினிமா துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும். 2 ஆம் இடத்தில் கேது இருப்பதால் பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
அனுகூலம்
வாழ்க்கையின் அடுத்தபடிக்குச் செல்லும் யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக வேலைக்குச் சென்று கொண்டிருப்பவர்களுக்கு உரிய ஊதியம் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் காலகட்டம். விவசாயத்தில் இருப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. சேமிப்பு எண்ணங்கள் உருவாகும்.
வழிபாடு
பண விஷயத்தில் சொன்ன வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். நீண்ட நாட்களாக வராத பணம் வந்து சேரும். கடின முயற்சியின் மூலம் அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் யோகம் உள்ளது. பெளர்ணமி கிரிவலம் செல்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications