தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு அடிக்கும் லாக் ஜாக்பாட்.. எல்லா யோகமும் உங்களுக்கு தான்
தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2026: 2026 தமிழ் புத்தாண்டு, பராபவ வருடம் கன்னி ராசியினருக்கு எப்படி இருக்கும், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும், வழிபட வேண்டிய தெய்வம், தொழில் வளர்ச்சி, வேலை, திருமணம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

கன்னி (Kanni)
கன்னி ராசியினருக்கு 7 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவானுக்கு குருவின் பார்வை படுவதால் திருமண விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி, விளையாட்டுத் துறையில் வெற்றி ஏற்படும். வழக்குகளில் வெற்றியைத் தரும். சகோதரர்களுடைய ஆதரவுகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். தாய் தந்தையின் உடல் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
திருமண யோகம்
குழந்தைகளின் வளர்ச்சி அமைப்பு நன்றாக இருக்கும். குழந்தை தாமதமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில் விஷயங்கள் பெருகும். நன்மைகள், தீமைகள் என கலவையான பலன்கள் கிடைக்கும். திருமணம் தாமதமானவர்கள் இந்த ஆண்டிலேயே முயற்சி எடுத்து திருமணம் செய்வது நல்லது. மற்றவர்களை நம்பாமல் உங்கள் திறமைகளை நம்பி காரியங்களைச் செய்வது நல்லது. இல்லையெனில் பெரிய ஏமாற்றத்தைச் சந்திக்கும் நிலை ஏற்படும். உங்களை நம்பி செய்யும் காரியங்களில் அற்புதமான ஏற்றம் ஏற்படும்.
சொத்துகள் சேரும்
திருமணத்தை தள்ளிப் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. உங்களால் செய்ய முடியாமல் இருந்து எல்லா விஷயங்களையும் செய்து முடிக்கும் யோகம் உண்டாகும். மாமன், அத்தை வகையில் இருப்பவர்களால் பொன் சேர்க்கை, சொத்து சேர்க்கை, ஆபரண சேர்க்கை, மற்றவர்களின் சொத்துகளுக்கு ரகசிய உரிமையாளராக இருப்பது போன்ற யோகம் உண்டாகும். புதன்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்வது, திருப்பதிக்குச் சென்று வருவது ஏற்றத்தைத் தரும்.
குருவின் அருள்
ராசிக்கு 7 ஆம் இடத்தில் சனி, 11 ஆம் இடத்தில் குரு பகவான் இருக்கிறார். நிறைய நன்மைகள் ஏற்படும் காலகட்டம். பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்று சேர்வதற்கான முயற்சி எடுத்தால் தேவையில்லாத சங்கடங்கள், தொந்தரவுகள் ஏற்படும். நண்பர்கள், சொந்த பந்தத்தில் இருப்பவர்களால் பகை உணர்வு ஏற்படும். முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது வெற்றியைத் தரும். விடாமுயற்சி, முன்கூட்டியே திட்டமிடுதல் உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும்.
நிதானம் அவசியம்
பொறுமை, நிதானம், அமைதியை கடைப்பிடிப்பது நல்லது. தனிக் குடித்தனம் போக வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும். யோசித்து செயல்படுவது நல்லது. வேலை வாய்ப்பு கிடைக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும் யோகம் உண்டு. ஐப்பசி மாதத்திற்குப் பிறகு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு வேலை அமைப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். திருப்பதி ஏழுமலையானை வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
வழிபாடு
நல்ல விஷயங்களை ஒதுக்காமல் இருக்காமல் இருப்பது நல்லது. அடுத்தடுத்து முடிவுகளை எடுப்பீர்கள். நிறைய வேலைகளைச் செய்வீர்கள். ஆக்கப்பூரவமான விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். கீழ் திருப்பதி கோவிந்த ராஜ பெருமாள், தாயாரை வழிபட்டு மேல் திருப்பதிக்கு செல்வது நன்மை. மாதத்தில் ஒரு முறை பெருமாள் கோயில்களுக்குச் சென்று வருவது பெரிய வெற்றியை ஏற்படுத்தும்.
கவனம்
குடும்பத்தில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் கவனம் தேவை. தெய்வ காரியங்களுக்காக அதிகமாக பணத்தை செலவழிப்பது, உடல் உழைப்பை செலவழிப்பது போன்ற யோகம் உண்டாகும்.
தொழிலில் ஏற்றம்
தொழிலில் அற்புதமான மாற்றம், முன்னேற்றம் ஏற்படும். இழந்த பதவிகள், கெளரவத்தைப் பெறுவீர்கள். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் உண்டாகும். காதல் அமைப்பு கைகூடும். பெற்றோர் பார்க்கும் வரன்கள் அமையும். அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும். குழந்தைகள் விஷயத்தில் ஏற்றம் பெறும் யோகம் உண்டு. ஒதுங்கியிருந்தவர்கள் எல்லாம் இனி அட்டகாசமாக செயல்படுவீர்கள். அசையும், அசையா பொருள் சேர்க்கை உண்டாகும். கூட்டாளிகளுக்கும் உங்களுக்கும் இருந்து வந்த மன தாங்கல்கள் தீரும். வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு.
-
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications