தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் மகர ராசியினருக்கு ஏற்படப் போகும் நன்மைகள், படிப்பு, தொழில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)

மகர ராசிக்கு குரு பார்வை முழுமையாக இருக்கிறது. மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். மற்றவர்களால் நிறைய உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். அவர்களால் உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். எதிர்பார்க்காத அத்தனை நல்ல விஷயங்களும் நடக்கும் காலகட்டம். திருமண வாய்ப்புகள் வந்து சேரும். உங்கள் கணவருக்கு கடல் கடந்த வாய்ப்புகள் வந்து சேரும். மனைவிக்கு பெரிய இடமாற்றம், ஆன்சைட் வாய்ப்புகள் கிடைக்கும்.

tamil-puthandu-rasi-palan-what-kind-of-benefits-will-get-magaram-rasi-people-during-this-period

ஆன்சைட் வாய்ப்பு

நியூசிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா, யுரோப்பியன் நேஷன் போன்ற இடங்களில் இடமாற்றவதற்கான வாய்ப்புள்ளது. வீட்டில் நிறைய சந்தோஷங்கள், அடுத்தடுத்து நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த பாதிப்புகள், சங்கடங்கள் எல்லாம் தீரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும்.

குழந்தை பாக்கியம்

குழந்தை பாக்கியம் உண்டாகும். பெண் குழந்தைகள் பிறக்கும் பாக்கியம் உண்டு. வீட்டில் நிறைய நல்ல காரியங்கள் நடக்கும். புது வசந்தம், புது வாழ்க்கை ஏற்படும். பிள்ளைகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். விவாகரத்து ஆகியிருந்தால் அவை சரியாகும். அடிவயிறில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். உங்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்.

திருமண யோகம்

திருமண யோகம், குழந்தை பாக்கியம், சுப காரியங்கள் உண்டாகும். வீட்டில் பெரியவர்களுக்கு திருமணம் செய்வது, பிள்ளைகள் வயதுக்கு வருவது, நிறைய பரிசுகள் கிடைப்பது, உங்களுக்காக நிறைய பேரும் உதவிகள் செய்யும் அமைப்பு உள்ளது. கணக்கு வழக்குகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பார்ட்னருக்கும், உங்களுக்கு இருந்து வந்த தேவையில்லாத இடையூறுகள், பிரச்சனைகள் ஏற்படும்.

ஆரோக்கியம்

புதிய பார்ட்னரால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏஜென்சி எடுப்பது, தண்ணீர், பால், தயிர் வியாபாரம், உணவு சார்ந்த வியாபாரங்கள் நன்றாக இருக்கும். ஒட்டுமொத்தமாக மகர ராசிக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பெண்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும். தேங்கியிருந்த பணங்கள் வந்து சேரும். முக்கியமான விஷயங்கள் ஈஸியாக நடக்கும். சுறுசுறுப்பாக மாறுவீர்கள்.

வழிபாடு

அக்டோபர் மாதத்திற்குப் பிறகு கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் வெற்றி ஏற்படும். தேவையில்லாத பிரச்சனைகள், சங்கடங்கள் தீரும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்டர்வியூக்களில் அற்புதங்கள் ஏற்படும். முக லட்சணம் உண்டாகும். உடம்பில் உள்ள கொழுப்பு குறையும். வாழ்க்கைத் துணையில் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+