Tamil Puthandu Rasi Palan: மீனம் ராசிக்கு கோடிகளை குவிக்கும் நேரம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் மீனம் ராசியினருக்கு ஏற்படப் போகும் நன்மைகள், படிப்பு, தொழில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)

மீனம் ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டுக்கு ஏ கிளாஸ் யோகம் உண்டாகும். சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கும் காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். மன வலிமை அதிகரிக்கும். மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவீர்கள். உடம்பில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும்.

tamil-puthandu-rasi-palan-what-kind-of-benefits-will-get-meenam-rasi-people-during-this-period

அனுகூலம்

வீட்டில் நல்ல காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். உடம்பில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். மன வலிமை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பேரக் குழந்தைகள் பெறும் யோகம் உண்டு. திருமண யோகம் ஏற்படும். தொழில் அமையும். நதிகள் பகுதியில் நிலங்கள் அமைந்து விவசாயம் செழிக்கும். கோயில் கட்டக்கூடிய அமைப்புகள் உண்டு. பள்ளிகள் ஆரம்பிப்பீர்கள். மாட்டுத் தொழுவம் ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். வங்கியில் நல்ல வேலைகள் கிடைகும்.

குரு அருள்

எல்லா நல்ல விஷயங்களும் தாராளமாக நடக்கும். பஞ்சம ஸ்தானத்தில் குரு அமர்ந்து, பாக்கியமாகப் பார்ப்பதால் குருவின் மூலமாக நல்ல அதிர்ஷ்டங்கள் ஏற்படும். குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். குழந்தைகள் முன்னேற்றம் அடைவீர்கள். வீட்டில் இருந்து வந்த அழுகை சப்தம் வெளியே போகும். வாழ்க்கை பிரகாசிக்கும் யோகம். எல்லா காரியங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் எல்லாம் நீங்கும். கொழுப்பு தொடர்பான விஷயங்களில் மட்டும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

மகிழ்ச்சி

பிடிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 80 சதவீத கடன் பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். பிள்ளைகளுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நீங்கள் படித்த கேள்விகள் எல்லாம் வரும். நல்ல மதிப்பெண் எடுப்பீர்கள். மனதில் பெரிய மகிழ்ச்சி ஏற்படும். குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். எல்லா விதமான மன நிறைவும் ஏற்படும்.

பணவரவு

பண வரவு அற்புதமாக இருக்கும். குரு பார்வை இருப்பதால் அபரிமிதமான பண வரவு ஏற்படும். நன்றாக சேமிப்பீர்கள். முதலீடுகளை செய்வீர்கள். கடன் தீரும். கடனை அடைக்கும் முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சொத்துகள் சேரும் யோகம் உண்டு. மாணவர்கள் நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் வெற்றி பெறும் யோகம் உண்டு. குலதெய்வ வழிபாடு அற்புதமான ஏற்றத்தைத் தரும்.

வழிபாடு

மதுரை மீனாட்சி அம்மனை வழிபாடு செய்வது பெரிய மாற்றத்தைத் தரும். திருமணத்துக்காக காத்திருப்பவர்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கல்யாணத்திற்கு தன்னால் முடிந்த தான தர்மங்களை செய்வேன் என்று வேண்டிக் கொள்வது நன்மை பயக்கும். 100க்கு 90 சதவீத நன்மைகளைப் பெறக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+