Mesham: மேஷம் ராசிக்கு புத்தாண்டில் வரப்போகும் அற்புதமான மாற்றங்கள்.. இதை மட்டும் கடைப்பிடிங்க
தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2026: 2026 தமிழ் புத்தாண்டு, பராபவ வருடம் மேஷம் ராசியினருக்கு எப்படி இருக்கும், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும், வழிபட வேண்டிய தெய்வம், தொழில் வளர்ச்சி, வேலை, திருமணம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் (Mesham)
இந்த ஆண்டு கடன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் விரைவில் நடக்கும். விரய சனி நடைபெறுதால் கடன்களை சுப கடன்களாக செய்வது நன்மை பயக்கும். வீடு வங்குவது, நிலம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற யோகம் உண்டாகும். தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழிலில் அமோகமான அபிவிருத்தி ஏற்படும். சனி 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் குடும்பம் சார்ந்த விஷயங்களில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. தாய், தந்தையின் உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது.

பண விஷயத்தில் கவனம்
பணத்தை முதலீடு செய்வதில், பணம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குரு பகவானின் பார்வை பலம் இருப்பதால் கடன், தொழிலில் முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள், கடன் பிரச்சனை எல்லாம் தீரும். சொத்துகளை வாங்கும் அமைப்பு உள்ளது. உங்களுக்கு வேண்டியவற்றை நீங்கள் செய்வீர்கள். வண்டி, வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. வீட்டில் கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும்.
தெளிவு பெறும் காலம்
சொத்து விவகாரங்கள் அதிகமாக இருக்கும் என்பதால் ஆவணங்களை சரிபார்த்துக் கொள்வது நல்லது. சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை போடுவது, சனி பகவானுக்கு தீபமேற்றுவது மேன்மையை ஏற்படுத்தும். வளர்ச்சியைக் கொடுக்கக்கூடிய ஆண்டாக இருக்கும். குழப்ப நிலைகள் தீர்ந்து தெளிவு பெறுவீர்கள். நிறைய சுப காரியஙகள் நடக்கும். சுப விரயங்கள் நடக்கும் யோகம் உண்டு. வண்டி, வாகனம் சம்பந்தப்பட விஷயங்களில் கவனம் தேவை. அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி, பெயர், புகழ் கிடைக்கும். பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
கவனம்
உடல் ரீதியாக, மன ரீதியாக மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதை கடைப்பிடிக்க வேண்டும். திருச்செந்தூர் சென்றுவிட்டு வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். புகழ், பெயர் பெரியளவுக்கு ஏற்படும். தனிப்பட்ட தொழிலில் இருந்து கூட்டுத்தொழில் தொடங்கும் யோகம் உண்டு.
தொழில்
பொது சேவைகளை செய்வீர்கள். மீடியா துறையில் இருப்பவர்கள், ஆசிரியப் பணி, அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பலம் பெறும் யோகம் உண்டு. உடற்பயிற்சியை கடைப்பிடிக்காவிடில் மன உளைச்சல் ஏற்படும். வண்டி, வாகன மாற்றம் ஏற்படும். ரத்த பந்த உறவுகளுடன் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மற்றவர்கள் கூறுவதை காதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வேலை ஆட்கள் சரியில்லை என்றால் அவர்களை மாற்றிக் கொள்வது நன்மையை ஏற்படுத்தித் தரும்.
அனுகூலம்
மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். புதிய தொழில் தொடங்குவதற்கு நல்ல காலகட்டம். பெரும் செல்வந்தர்கள் உங்களுக்கு உதவுவதற்கான அற்புதமான காலகட்டம். நோய் பாதிப்புகள் தீருவதை கண்கூடாகப் பார்க்கலாம். அதிர்ஷ்டத்தையும், நன்மைகளையும் அள்ளித் தரும் ஆண்டாக இந்த பராபவ ஆண்டு உங்களுக்கு அமையும்.
-
2026 குருப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு குருப்பெயர்ச்சியில் பெரிய மாற்றம்! 2026ல் அதிர்ஷ்டம் வருமா? -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications