தமிழ் புத்தாண்டு பலன்: சிம்ம ராசியை ஆட்டிப் படைக்கும் அஷ்டமசனி.. அதிர்ஷ்டமும் காத்திருக்கு
தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2026: 2026 தமிழ் புத்தாண்டு, பராபவ வருடம் சிம்ம ராசியினருக்கு எப்படி இருக்கும், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும், வழிபட வேண்டிய தெய்வம், தொழில் வளர்ச்சி, வேலை, திருமணம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

சிம்மம் (Simmam)
சிம்ம ராசியினருக்கு அஷ்டமசனி நடந்து கொண்டிருக்கிறது. ஜென்மத்தில் கேது, 7 இல் ராகு அமர்ந்திருக்கிறது. கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்படும். பார்ட்னர்ஷிப்பில் ஆவணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பெரிய முதலீடுகளைப் போடாமல் இருப்பது நல்லது. லாபம் கிடைக்காத சூழ்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
அனுகூலம்
வீடு கட்டுவது, இடம் வாங்குவது, வண்டி வாகன வாங்கும் யோகம் யோகம் உண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் வேலை கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். வழக்குகளை முடிக்கும் யோகம் உண்டு. வழக்குகளை கவனமாக கையாளுவது நல்லது. துணையிடம் கவனமாகப் பேசுவது நன்மையத் தரும். புதிய தொழில் தொடங்காமல் இருக்கும் தொழிலை சிறப்பாக செய்வது நல்லது.
வாக்குவாதம் வேண்டாம்
வண்டி வாகனங்களை பெரிதளவில் வாங்காமல் இருப்பது நல்லது. சகோதர, சகோதரிகளிடம் வாக்குவாதம் செய்யாமல், இணக்கமாகச் செல்வது நல்லது. உங்களுடைய வீட்டின் பெரியவர்கள், வழிகாட்டிகளிடம் வாக்குவாதம் இல்லாமல் இருப்பது நன்மை பயக்கும். இருப்பதை வைத்து சிறப்பாக இருந்தாலே இந்த காலகட்டம் நன்றாக இருக்கும். கடன் வாங்கி இடம், வீடு வாங்கலாம் என்ற எண்ணம் இருந்தாலும் அதை சரியாக செய்வது நன்மை பயக்கும். சனி பகவானுக்கு விளக்கேற்றி செயல்படுவது நல்லது. எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.
அலைச்சல்
ராசியில் கேது, அஷ்டமத்து சனி நடப்பதால் அதீத அலைச்சல்கள் ஏற்படும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். உங்களுடைய செயலில் உண்மை, நேர்மை இருந்தால் பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. விடாமுயற்சியின் மூலமாக எல்லா காரியங்களையும் வெற்றி பெறக்கூடிய அமைப்புள்ளது. புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் இருப்பவர்கள், உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கவனம்
உணவு விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஓய்வு, தூக்கம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் விஷயத்தில் கடுமையான முயற்சிகள் மூலமாகவே வெற்றி பெறக்கூடிய அமைப்பு உள்ளது. அரசியலில் செல்ல வேண்டும் என்கிற எண்ணங்கள், சூழல்கள் ஏற்படும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் இணக்கமாக இருப்பது நல்லது. பல்வேறு விதமான வளர்ச்சி ஏற்பட பிள்ளையார்பட்டி சென்று விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
குரு பார்வை
அஷ்டமசனியில் குரு பார்வை வருவதால் நிறைய நன்மைகள் நடக்கும். பெரிய கெளரவங்கள் ஏற்படும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த அந்நியோன்ய குறையபாடுகள், கஷ்டங்கள் தீரும். வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, வசதியைப் பெருக்கிக் கொள்வது போன்ற அமைப்பு உள்ளது. துணை, காதல் அமைப்பில் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் நல்ல அமைப்பு ஏற்படும். பழைய கடன்கள் தீரும். மாணவர்களுக்கு நல்ல படிப்பு கிடைக்கும் அமைப்பு உள்ளது.
வழிபாடு
மலச்சிக்கல், கழிவுப் பாதையில் பாதிப்புகள் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. உறவுகளில் மேன்மை ஏற்படும். பெற்றோர், பெரியோர் திடீர் அதிர்ஷ்டம் பெறுவார்கள். உடன்பிறந்தவர்களிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். விரயங்கள் அதிகமாக இருப்பதால் விலை உயர்ந்த பொருட்கள் விஷயத்தில் கவனம் தேவை. பஞ்சவடி ஆஞ்சநேயர் வழிபாடு நன்மையைத் தரும். ஞாயிற்றுக்கிழமை தோறும் பைரவருக்கு தீபமேற்றுவது மேன்மையைத் தரும்.
-
குருப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு என்ன பலன்?.. யாருக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது! -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications