Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. சொத்து விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2026: 2026 தமிழ் புத்தாண்டு, பராபவ வருடம் துலாம் ராசியினருக்கு எப்படி இருக்கும், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும், வழிபட வேண்டிய தெய்வம், தொழில் வளர்ச்சி, வேலை, திருமணம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

Tamil puthandu rasi palan Thulam lucky zodiac signs

துலாம் (Thulam)

துலாம் ராசியினருக்கு அற்புதமான ஆண்டாக இருக்கும். தன ஸ்தானத்தையும், சுக ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் எல்லா விதமான விஷயங்களிலும் நல்ல வருமானம் கிடைக்கும். புதிதாக வீடு கட்டுவது, இடம் வாங்குவது, வண்டி வாகனம் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். தாயின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 5 இல் இருக்கும் ராகு பகவான் மருத்துவ அமைப்பில் குழந்தை பாக்கியத்தை கொடுப்பார்.

வெற்றி மேல் வெற்றி

6 இல் இருக்கும் சனி பகவான் எல்லா விஷயத்திலும் வெற்றியைக் கொடுக்கும். வழக்குகளில் வெற்றிகள் ஏற்படும். தேர்வில், விளையாட்டுத் தேர்வில் அற்புதமான வெற்றிகள் ஏற்படும். 12 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் தூக்கமின்மை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தை மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 11 இல் இருக்கும் கேது பகவானால் மூத்தோர்களுக்கு சிறு சிறு உடல் உபாதை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தொழில் நன்றாக இருக்கும்.

ஆரோக்கியம்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். எல்லாவித சுப விஷயங்களும் நடக்கக்கூடிய அமைப்பு உள்ளது. துணையிடம் வாக்குவாதங்கள் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உடல் உபாதைகள் வரும் வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.

சொத்து விஷயத்தில் கவனம்

பூர்வீக சொத்து வில்லங்கள் எல்லாம் தீரும். சொத்து விவகாரத்தால் நிறைய மன உளைச்சல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பேராசையால் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புள்ளது. சொத்து சேர்க்கக்கூடிய அமைப்புகள் உள்ளது. பெரியவர்களுக்கு மூட்டு, இடுப்பு, கால் பாதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வெளிநாடுகளில் வேலை செய்ய வேண்டும் என்று கனவுகளோடு இருப்பவர்கள் வெளிநாடு வேலைக்கான பணம் கட்டுவது, விசாவுக்காக பணம் கட்டி ஏமாறுவது போன்ற அமைப்பு உள்ளது.

கவனம்

வண்டி, வாகனங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கூட்டுத்தொழிலாளர்களுடன் மூன்றாவது நபர்களால் மன உளைச்சல், சங்கடங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நல்ல ஒரு வளர்ச்சியும், மகிழ்ச்சியும் ஏற்படும். புதன்கிழமை தோறும் மகாலட்சுமி வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கடல் தாண்டி நல்ல வளர்ச்சி ஏற்படும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படும். புதிய பொறுப்புகள், பதவிகள், கெளரவம் ஏற்படும். வயதில் மூத்த நபர்களுடன் பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். திடீர் அதிர்ஷ்டங்கள், யோகங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது. பல வகைகளில் வருமானம் ஏற்படும். சிறு சிறு தொழில் செய்பவர்கள் கூட பெரிய வளர்ச்சி, முன்னேற்றத்திற்கான முயற்சிகள் கைகூடும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

குழந்தை பாக்கியம்

கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். லாபமும், வளர்ச்சியும் உண்டாகும் காலகட்டம். ஜவுளி வியாபாரம், மளிகை வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும்.கூட்டுத் தொழிலாளர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு, காவல் தெய்வ வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+