தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள் எவை, என்னவிதமான நற்பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தை குவிக்கும் 3 ராசியினர் யார், கிடைக்கும் நன்மைகள், படிப்பு, தொழில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

tamil-puthandu-rasi-palan-which-3-zodiac-signs-will-be-got-lots-of-money-during-this-month

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசிக்கு டாப் கிளாஸ் யோகம் தரும் ஆண்டாக இருக்கும். வாழ்க்கையை செட்டிலாக்கிக் கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். பாக்கியத்தில் குரு இருப்பதால் பெரிய அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அசாத்தியமான அதிர்ஷ்டம், தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். நிறைய பேர் வெளியூர், வெளிநாடு செல்வது, பிஆர் கிடைப்பது, கோல்டன் விசா வாங்குவதற்கான யோகம் உண்டாகும். கோயில் கட்டுவது, வீடு கட்டுவது, தொழில் அமைவது, பூர்வீக தொழில் கிடைப்பது, எம்பஸியில் வேலை கிடைப்பது, நீதிபதியாவது, அலுவலகத்தில் கொண்டாடுவது போன்ற யோகங்கள் உண்டாகும்.

ஒரு இடத்தில் இல்லாமல் பல இடங்களில் இருக்கும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் கண்டிப்பாக குழந்தைகளுக்காக செலவு, மாற்றம் செய்வீர்கள். நிறைய பேருக்கு குடும்பம் அமையும். திருமணமாகும் யோகம் உண்டு. மறுமணத்திற்கான வாய்ப்பு ஏற்படும். எங்கு சென்றாலும் உங்களைப் பற்றி பேசக்கூடிய, பொறாமைப்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். மாபெரும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். புதிய விஷயங்களை எடுத்துச் செய்வீர்கள். வீட்டில் நிறைய நன்மைகள் நடக்கும்.

மாபெரும் வெற்றி

ஆரோக்கிய குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். மாபெரும் வெற்றி பெறும் யோகம் உண்டு. உங்களுடைய வேலை, லட்சியத்தை மட்டும் விட்டு விடாதீர்கள். யாராக இருந்தாலும் தைரியமாக நின்று ஜெயிக்கக்கூடிய யோகம் உண்டாகும். வாய்ப்பு உங்களைத் தேடி வரும். தெய்வ அனுக்கிரகம் முழுமையாக இருக்கம். பூர்வீகத்தில் முதலீடு செய்யும் யோகம் உண்டாகும். பூர்வீக நிலத்தில் முதலீடு செய்வீர்கள். கோயில் கட்டும் யோகம் உண்டு. ஆஸ்திரேலியாவில் செட்டிலாகும் யோகம் உண்டு. தேனியில் ரிசார்ட் கட்டும் வாய்ப்புள்ளது. வளர்ச்சியைக் கொடுக்கக்கூடிய அமைப்பு உள்ளது. பெரிய மாற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும்.

குரு பார்வை ராசி, லக்னத்தில் இருப்பதால் பண வரவு சிறப்பாக இருக்கும். உங்களைப் பார்த்தாலே பணம் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வர வேண்டிய அரியர் பணங்கள் வந்து சேரும். வழக்குகளில் சிக்கியிருப்பவர்கள் அதிலிருந்து மீண்டு வரும் யோகம் உண்டு. அற்புதமான அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள லட்சுமி பூவராக சுவாமியை வழிபாடு செய்வது நன்மையைப் பெற்றுத் தரும். 100க்கு 90 சதவீதம் நன்மைகள் நிறைந்த ஆண்டாக இருக்கும்.

மகரம் ராசி பலன்

பிறக்கும் தமிழ் புத்தாண்டில் மகர ராசிக்கு குரு பார்வை முழுமையாக இருக்கிறது. மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். மற்றவர்களால் நிறைய உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். அவர்களால் உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். எதிர்பார்க்காத அத்தனை நல்ல விஷயங்களும் நடக்கும் காலகட்டம். திருமண வாய்ப்புகள் வந்து சேரும். உங்கள் கணவருக்கு கடல் கடந்த வாய்ப்புகள் வந்து சேரும். மனைவிக்கு பெரிய இடமாற்றம், ஆன்சைட் வாய்ப்புகள் கிடைக்கும். அடுத்தடுத்து நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த பாதிப்புகள், சங்கடங்கள் எல்லாம் தீரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும்.

குழந்தை பாக்கியம் உண்டாகும். பெண் குழந்தைகள் பிறக்கும் பாக்கியம் உண்டு. வீட்டில் நிறைய நல்ல காரியங்கள் நடக்கும். புது வசந்தம், புது வாழ்க்கை ஏற்படும். பிள்ளைகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். விவாகரத்து ஆகியிருந்தால் அவை சரியாகும். அடிவயிறில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். உங்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்.

திருமண யோகம்

திருமண யோகம், குழந்தை பாக்கியம், சுப காரியங்கள் உண்டாகும். வீட்டில் பெரியவர்களுக்கு திருமணம் செய்வது, பிள்ளைகள் வயதுக்கு வருவது, நிறைய பரிசுகள் கிடைப்பது, உங்களுக்காக நிறைய பேரும் உதவிகள் செய்யும் அமைப்பு உள்ளது. கணக்கு வழக்குகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பார்ட்னருக்கும், உங்களுக்கு இருந்து வந்த தேவையில்லாத இடையூறுகள், பிரச்சனைகள் ஏற்படும். ஏஜென்சி எடுப்பது, தண்ணீர், பால், தயிர் வியாபாரம், உணவு சார்ந்த வியாபாரங்கள் நன்றாக இருக்கும். ஒட்டுமொத்தமாக மகர ராசிக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

பெண்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும். தேங்கியிருந்த பணங்கள் வந்து சேரும். முக்கியமான விஷயங்கள் ஈஸியாக நடக்கும். சுறுசுறுப்பாக மாறுவீர்கள். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் வெற்றி ஏற்படும். நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)

மீனம் ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டுக்கு ஏ கிளாஸ் யோகம் உண்டாகும். சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கும் காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். மன வலிமை அதிகரிக்கும். மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவீர்கள். உடம்பில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். வீட்டில் நல்ல காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். உடம்பில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். மன வலிமை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

திருமண யோகம் ஏற்படும். தொழில் அமையும். நதிகள் பகுதியில் நிலங்கள் அமைந்து விவசாயம் செழிக்கும். கோயில் கட்டக்கூடிய அமைப்புகள் உண்டு. பள்ளிகள் ஆரம்பிப்பீர்கள். மாட்டுத் தொழுவம் ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். வங்கியில் நல்ல வேலைகள் கிடைகும். எல்லா நல்ல விஷயங்களும் தாராளமாக நடக்கும். பஞ்சம ஸ்தானத்தில் குரு அமர்ந்து, பாக்கியமாகப் பார்ப்பதால் குருவின் மூலமாக நல்ல அதிர்ஷ்டங்கள் ஏற்படும். குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். குழந்தைகள் முன்னேற்றம் அடைவீர்கள்.

பண வரவு சூப்பர்

பண வரவு அற்புதமாக இருக்கும். குரு பார்வை இருப்பதால் அபரிமிதமான பண வரவு ஏற்படும். நன்றாக சேமிப்பீர்கள். முதலீடுகளை செய்வீர்கள். கடன் தீரும். கடனை அடைக்கும் முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சொத்துகள் சேரும் யோகம் உண்டு. மாணவர்கள் நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் வெற்றி பெறும் யோகம் உண்டு. குலதெய்வ வழிபாடு அற்புதமான ஏற்றத்தைத் தரும்.

மதுரை மீனாட்சி அம்மனை வழிபாடு செய்வது பெரிய மாற்றத்தைத் தரும். திருமணத்துக்காக காத்திருப்பவர்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கல்யாணத்திற்கு தன்னால் முடிந்த தான தர்மங்களை செய்வேன் என்று வேண்டிக் கொள்வது நன்மை பயக்கும். 100க்கு 90 சதவீத நன்மைகளைப் பெறக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+