தமிழ் புத்தாண்டில் எந்த ராசியினருக்கு காதல் திருமண யோகம்?.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ள அதிர்ஷ்ட ராசியினர் யார் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)
துலாம் ராசிக்கு பாக்கியத்தில் குரு ஜூன் மாதம் வரை இருப்பதால் அற்புதமான நல்ல காலகட்டமாக இருக்கும். வீட்டில் எல்லா நல்ல காரியங்களும் நடக்கும். எல்லாருமே உங்களை அழைத்துப் பேசுவார்கள். உங்களுடைய பார்வை, திட்டமிடுதல், கலாசாரம் எல்லாமே சரியாக இருக்கும். ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை வேலையில் நிறைய சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. 10 ஆம் இடத்தில் குரு வந்து அமர்வதால் கண்டிப்பாக இடாமாற்றம், வேலை மாற்றம், துறை மாற்றம், அலைச்சல் நிறைந்த வேலை போன்றவை அமையும். கன்சல்டன்ட் உத்தியோகம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். புது வேலை, புதிய தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

10 இல் குரு
ஒப்பந்தம் போடுவது, வாடகை வருமானம் வியாபாரம் செய்வது, நிர்வாகம் பார்க்கக்கூடிய வியாபாரம், சப் கான்டிராக்ட் கிடைப்பது போன்ற யோகம் உண்டாகும். 10 ஆம் இடத்தில் குரு, திரிகோணத்தில் சனி வரும்போது வேலை, தொழில், அந்தஸ்து, உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல மாற்றம் உண்டாகும். வழக்கறிஞர்கள், ஆடிட்டர்களுக்கு நன்றாக இருக்கும். காசு, பணத்திற்கு எந்தவிதமான பஞ்சமும் இருக்காது. வீட்டில் சுபிக்ஷம், மனநிம்மதி ஏற்படும்.
காதல் திருமணம் செய்யும் யோகம் உண்டாகும். ஜூன் மாதத்திற்குள் திருமணம் செய்து கொள்வது நல்லது. தொழில்நுட்பம், பொறியியல் சார்ந்த துறை, மருத்துவம் சார்ந்த துறை, மீடியா துறை நன்றாக இருக்கும். காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவி தாயாரை வழிபாடு செய்வது நல்லது. திங்கள்கிழமை காலையில் 6 முதல் 7 மணி வரை சென்று சுவாமி தரிசனம் செய்து தருவது நல்லது. 100க்கு 80 சதவீதம் முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)
தனுசு ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு எல்லா விஷயங்களிலும் கவனாக இருப்பது நல்லது. அரசு வேலைகளில் இருப்பவர்கள் தேவையில்லாத விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் விஷயத்திற்காக நிறைய செலவுகளை செய்யக்கூடிய அமைப்பு உள்ளது. அதிகமான செலவுகளை செய்வீர்கள். சுபவிரயம், ஆடம்பர விரயமாக இருக்கும். கல்விக்காக நிறைய செலவு செய்வீர்கள். நிறைய உழைக்கக்கூடிய நிலைமை ஏற்படும்.
வேறு நாடு, மாநிலம், வேறு மொழி பேசும் சமூகத்தின் பக்கத்தில் இருப்பது நன்மையைத் தரும். சுபகிரகங்கள் மறைவதால் சுவாமிக்கு விரதம் இருப்பது நன்மை பயக்கும். வியாழக்கிழமை தோறும் சாய்பாபா, ராகவேந்திரருக்கு விரதம் இருப்பது, இல்லையெனில் திங்கள்கிழமை மட்டும் காலை, இரவில் வெறும் பழங்களை மட்டும் சாப்பிடுவது நன்மை பயக்கும். உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தீரும்.
காதல் திருமணம் செய்யும் யோகம் உண்டாகும். ஜூன் மாதத்திற்குள் திருமணம் செய்து கொள்வது நல்லது. வழக்குகளை செட்டில்மென்ட் செய்வீர்கள். உறவுகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. தப்பான சேர்க்கை, தப்பான விஷயங்களை செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உங்களால் முடியும், முடியாது என்பதை தெளிவாக சொல்லிவிட வேண்டாம். மற்றவர்களுக்காக சிபாரிசு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அண்ணன், தம்பியுடன் நிறைய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)
மிதுன ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டு முதல் நீங்கள் சொன்னதெல்லாம் நடக்கும் காலகட்டம். இவ்வளவு நாள் அவமரியாதை சந்தித்து வந்திருப்பீர்கள். உங்களிடமிருந்து அட்வைஸ் வாங்கி மற்றவர்கள் நன்றாக இருந்திருப்பார்கள். கழுத்துப் பகுதியில் பிரச்சனைகள் வந்திருக்கும். எந்த விஷயத்தை பேச வேண்டுமோ அதைத் தவிர மற்ற விஷயங்களை எல்லாம் பேசி நேரத்தை வீணடித்திருப்பீர்கள்.
2 ஆம் இடத்தில் குரு அமர்ந்திருப்பதால் எதிர்பார்க்காத அளவுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். பாக்கிய ஸ்தானத்தில் ராகு டிசம்பர் மாதம் வரை அங்கு அமர்ந்திருப்பதால் வெளியூர் பயணங்கள் நிறைய ஏற்படும். வெளிநாடு சென்று வருவது, கோயிலுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. காதல் திருமணம் செய்யும் யோகம் உண்டாகும். ஜூன் மாதத்திற்குள் திருமணம் செய்து கொள்வது நல்லது.
குரு உச்ச ஸ்தானம் அடையும் போது புனர்பூசம், பூசம், ஆயில்ய நட்சத்திரத்தில் வெளியே போகும்போது 2027 மே மாதம் வரை பணம் கொட்டும். பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. எப்படி சேமிக்க வேண்டும் என்று நீங்கள் முடிவெடித்துக் கொள்வது நல்லது. நிறைய பேருக்கு பேங்கில் வேலை கிடைக்கும். டெல்லர், பினான்சியர், கேஸியர் ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு.
கும்பம் ராசி பலன் (Kumbam Rasi Palan)
கும்ப ராசிக்கு பணத்திற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேனேஜர் பதவி போன்ற ப்ரோமோஷன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலில் வாங்கியிருக்கும் கடன்கள் தீரும். குடும்பத்திற்காக கடன் வாங்கி நல்ல விஷயங்களைச் செய்வீர்கள். திருமணம் போன்றவற்றை நடத்தி வைப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் போன்றவை நீங்கும்.
புதிய வாய்ப்புகள் தேடி வரும். நான் என்கிற அகந்தையை விட்டு விடுவது நல்லது. பொறுமை, அமைதி, நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சண்டை போட்டுதான் காரியத்தை சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை மாற்றிக் கொள்வது நல்லது. சத்தமே இல்லாமல் எல்லா விஷயங்களையும் செய்வது நன்மை பயக்கும். வேலை நன்றாக இருந்தாலும் தேவையில்லாமல் அதை வைத்து சண்டை செய்வது, இரவில் செல்போன்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
காதல் திருமணம் செய்யும் யோகம் உண்டாகும். ஜூன் மாதத்திற்குள் திருமணம் செய்து கொள்வது நல்லது. பணவரவுகள் தாரளமாக இருக்கும். 50 சதவீத கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கடன் வாங்குவது நன்மை பயக்கும். குரு 6 ஆம் இடத்தில் இருப்பதால் சிறிய கடன்களை வாங்கி அதனை கட்டிக் கொண்டிருப்பது நன்மை பயக்கும். ராகு ராசி, லக்னத்தில் இருந்தாலும் பட்ட இடத்திலேயே காயம் படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. எல்லா விஷயங்களும் சாதகமாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications