அடிச்சான் பாரு அப்பாயிண்மென்ட் ஆர்டரு.. தனுசு ராசிக்கு ஜாக்பாட்.. அம்மாவிடம் மட்டும் அமைதியோ அமைதி
தமிழ் புத்தாண்டு: இந்த தமிழ் புத்தாண்டில் 4 கிரகங்களின் சேர்க்கையால் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கப் போகிறது. என்ன பலன்கள் கிடைக்கும். எதில் எச்சரிக்கை தேவை என்று இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
தனுசு ராசியினருக்கு 3 ஆம் இடத்தில் ராகு, 7 ஆம் இடத்தில் குரு வருகிறார். குரு தனது சொந்த வீட்டைப் பார்ப்பதால் திருமண யோகம் உண்டாகும். பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இடம் வாங்கும்போது ஆவணங்களை கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களால் அன்பு தொல்லைகளை அனுபவிப்பீர்கள்.

அதிர்ஷ்டம்
குருவின் அனுக்கிரகம் இருப்பதால் நினைத்தது நடக்கும் காலகட்டமாக இருக்கும். புத்திசாலித்தனமாக அனைத்து காரியங்களையும் செய்து முடிப்பார்கள். மனைவி அல்லது கணவனிடம் பொறுப்பை ஒப்படைப்பீர்கள். குரு பகவானுடைய வழிபாடு தனுசு ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
திருமண யோகம்
தமிழ்ப் புத்தாண்டில் மிகுந்த நல்ல பலன்களை அனுபவிக்கும் ராசிகளில் முதன்மை ராசியாக தனுசு ராசிக்காரர்கள் இருப்பார்கள். தன்னம்பிக்கை வேறு வகையில் உயரும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிப்புகளைச் சந்தித்து வந்த உங்களுக்கு 4 கிரகங்களின் பெயர்ச்சியால் பிரம்மாண்டமான யோகம் கிடைக்கும். திருமண யோகம், புத்திர சந்தானம் உண்டாகும். காதல் இனிக்கும் காலகட்டம்.
வாக்குவாதம்
சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து, கெளரவம் கிடைக்கும். சனி 4 ஆம் இடத்தில் அமருவதால் அம்மாவிடம் பேசும்போது வார்த்தைகளில் மட்டும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் தேவையில்லாத வாக்குவாதம் ஏற்படும். சொத்துகளை வாங்குபவர்கள் ஆவணங்களை சரியாகப் பார்க்காவிட்டால் தேவையில்லாத அலைச்சல்களை சந்திப்பீர்கள்.
குரு பார்வை
3 ஆம் இடத்தில் ராகு அமர்ந்திருப்பதால் தரவுகள் நிறைய கிடைக்கும். அதன் மூலமாக சிறு புள்ளி வைத்தால் கூட நிறைய அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள். நிறைய பயணங்களை மேற்கொள்ளும் யோகம் உண்டாகும். அதன் மூலம் அனுகூலம் உண்டாகும். தெய்வ கடாட்சம் உண்டாகும். தொட்டதெல்லாம் துலங்கும் யோகம் கிடைக்கும். குரு ராகு பார்வை இருப்பதால் வயிறு மற்றும் உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எச்சரிக்கை
கழிவுப் பகுதியில் பிரச்சனை ஏற்படும். இனி உடற்பயிற்சியை மேற்கொள்வீர்கள். முதலீடு விஷயங்களில், ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கால பைரவர் வழிபாடு மிகப்பெரிய ஏற்றத்தை தரும். குரு பார்வை இருப்பதாலும், ராசிக்கு அதிபதியாக இருப்பதால் உங்களுடைய நற்பெயர் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள், பதவி உயர்வு கிடைக்கும்.
அசுர வளர்ச்சி
வியாபாரத்தில் அசுர வளர்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திரப் பேறு உண்டாகும். பெரும் பொருளைச் சந்திப்பீர்கள். ஞானத்துடன் செயல்பட்டு எல்லா காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். 4 ஆம் இடத்தில் சனி அர்த்தாஷ்டம சனி வருவதால் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது நல்லது. மகான்கள் வழிபாடு உறுதுணையாக இருக்கும்.
தொழில்
காதலிப்பவர்களுக்கு திருமணம் கைகூடும் காலமாக இருக்கும். தொழிலில் அதீத லாபத்தை சம்பாதிக்கும் காலகட்டமாக இருக்கும். தொடர்ந்து ஹயக்ரீவர் வழிபாடு செய்வது அமோகமான பலன்களைத் தரும். பொருளாதாரத்தில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்படும். தொட்டதெல்லாம் பொன்னாக கூடிய காலகட்டமாக இருக்கும். எதிர்காலத்தை கணித்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். யோகமான காலகட்டமாக அமையும்.
-
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications