தை மாத பலன் 2026: தனுசு ராசிக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. 30 நாட்களில் குட்நியூஸ் கன்ஃபார்ம்

Subscribe to Oneindia Tamil

தை மாத ராசி பலன்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனுடைய தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் மாதமே மகர மாதம். தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று பலர் காத்துக் கொண்டிருப்பார்கள். மகாபாரதத்தின் பிதாமகனான பீஷ்மர் இந்த தை மாதத்துக்காகவே அம்பு படுக்கையில் தன் உயிர் போவதற்காக காத்துக் கொண்டிருப்பாராம். அந்த அளவுக்கு புனிதமான மாதம்.

thai-matha-palan-dhanusu-rasi-people-will-get-huge-success-and-lots-of-money-during-this-month

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதம். சூரியனை வழிபடும் பண்டிகையே பொங்கல் பண்டிகை. சூரியன் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது. இந்த தை மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த தை மாதம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். ராசியிலேயே செவ்வாய், சுக்கிரன், சூரியன், புதன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. தேவையில்லாத கோபம், டென்சன் ஏற்படும். 8 ஆம் இடத்தில் ராசிநாதன் மறைந்திருந்ததால் தேவையில்லாத மன அழுத்தத்தில் இருந்திருப்பீர்கள்.

மன அழுத்தம் தீரும்

ராசிநாதன் 7 ஆம் இடத்திற்கு குரு வருவதால் தேவையில்லாத மன அழுத்தம் எல்லாம் நீங்கும். திருமண யோகம் ஏற்படும். குடும்ப வாழ்க்கை தை மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு அற்புதமாக இருக்கும். காதல் மலரக்கூடிய காலகட்டம். செவ்வாய் ராசியில் இருப்பதால் இனம்புரியாத டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும். தேவையில்லாத விரக்தி மன நிலை இருக்கும்.

திருமண யோகம்

மனதில் சந்தோஷம் இல்லாத சூழல் காணப்படும். ஜனவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் பகவான் 2 ஆம் இடத்தில் உச்சம் பெறுவதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு செல்லக்கூடிய யோகம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டங்கள், லாட்டரியில் அதிர்ஷ்டம் கிடைக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். செல்வம் அதிகரிக்கக்கூடிய காலகட்டம்.

அரசு வேலை

யோகாதிபதி தனாதிபதி வீட்டில் உச்சமடைவதால் பண வரவு நன்றாக இருக்கும். மனம் விரும்பக் கூடிய துணை கிடைப்பார்கள். படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். முன்னேற வேண்டும், ஜெயித்துக் காட்ட வேண்டும் என்கிற வெறி ஏற்படும். ஆண் குழந்தை பிறப்பதற்கான யோகம் ஏற்படும். அரசு வேலை கிடைக்கும் பிராப்தம் உண்டாகும்.

வழிபாடு

ராசியில் 4 கிரகங்கள் இருப்பதால் சந்திர பகவான் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். கடற்கரைகளுக்குச் செல்வது நல்லது. சந்திர பகவானுக்கு மலர் சூட்டி வழிபாடு செய்வது நன்மையைத் தரும். குன்றத்தூர் சோமங்களம் சென்று வருவது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+