தை மாத பலன் 2026: கன்னி ராசியை சுத்துப் போடும் கிரகங்கள்.. கோபத்தை கட்டுப்படுத்துங்க
தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனுடைய தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் மாதமே மகர மாதம். தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று பலர் காத்துக் கொண்டிருப்பார்கள். மகாபாரதத்தின் பிதாமகனான பீஷ்மர் இந்த தை மாதத்துக்காகவே அம்பு படுக்கையில் தன் உயிர் போவதற்காக காத்துக் கொண்டிருப்பாராம். அந்த அளவுக்கு புனிதமான மாதம்.

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதம். சூரியனை வழிபடும் பண்டிகையே பொங்கல் பண்டிகை. சூரியன் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது. இந்த தை மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு கோபம் அதிகளவில் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும். 4 ஆம் இடமான சுக ஸ்தானத்தில் அனைத்து கிரகங்களும் உள்ளன. வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகள் உங்களையே குறிவைத்து வேலையைக் கொடுப்பது போன்ற சூழல் ஏற்படும். 3, 8க்கு உரிய செவ்வாய் பகவான் 5 ஆம் இடத்துக்கு ஜனவரி 15 ஆம் தேதிக்கு பிறகு செல்கிறார்.
சொத்து பிரச்சனை
5 ஆம் இடம் என்பது சொத்து, குழந்தைகள். குழந்தைகள் தொடர்பான விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள், குடும்பத்தினர் விஷயத்தில் இணக்கமாக செல்ல வேண்டும். டென்ஷனை குறைத்துக் கொள்வது நல்லது. துணையுடன் சண்டை சச்சரவுகள் மேற்கொள்ளாமல் பிரஷரை குறைத்துக் கொள்ள வேண்டும். சொத்து சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
தொழில்
சொத்துகள் தொடர்பான ஆவணங்களை படித்துப் பார்த்துவிட்டு வாங்குவது நன்மை பயக்கும். நண்பர்களால் பிரச்சனைகள் வருவதற்கான சூழல் ஏற்படும். 1, 10க்கு உடையவர் 5 ஆம் இடத்துக்குச் செல்கிறார். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நல்ல நல்ல யோகங்கள் கிடைக்கும். பெரிய விஷயங்கள் கிடைக்கும். அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லத் தொடங்குவீர்கள்.
வேலைவாய்ப்பு
அடுத்த ஜூன் மாதத்திற்குள் வேலை போகும் வாய்ப்பு ஏற்படும். ஜனவரி மாதத்திற்குப் பிறகு மீண்டும் குரு பகவான் வாய்ப்பு கொடுப்பதால் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். கன்னி ராசியினருக்கு 7 ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் காதல் கண்டிப்பாக மலரும்.
திருமண யோகம்
செவ்வாய் உச்சமாக இருப்பதால் திருமண யோகம் தடைபடுவதால் காதல் செய்வதை இப்போது தவிர்த்துக் கொள்வது நல்லது. பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு காதலிப்பது சிறப்பைக் கொடுக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications