தை மாத பலன் 2026: குருவின் அருளால் மீனம் ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. உங்க காட்டுல மழை தான்
தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனுடைய தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் மாதமே மகர மாதம். தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று பலர் காத்துக் கொண்டிருப்பார்கள். மகாபாரதத்தின் பிதாமகனான பீஷ்மர் இந்த தை மாதத்துக்காகவே அம்பு படுக்கையில் தன் உயிர் போவதற்காக காத்துக் கொண்டிருப்பாராம். அந்த அளவுக்கு புனிதமான மாதம்.

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதம். சூரியனை வழிபடும் பண்டிகையே பொங்கல் பண்டிகை. சூரியன் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது. இந்த தை மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு 2026 தை மாதம் உங்களுக்கான மாதமாக இருக்கும். 2க்கு உடைய செவ்வாய் பகவான் 11 ஆம் இடத்தில் உச்சம் பெறுகிறார். அந்த அளவுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பிப்ரவரி இறுதி வரைக்கும் உங்களுக்கு அமோகமான நல்ல பலன்கள் கிடைக்கும். 10 ஆம் இடத்திற்கு அனைத்து கிரகங்களும் வந்திருக்கின்றன.
10 இல் பாவி
சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய 4 கிரகங்கள் 10 ஆம் இடத்தில் உள்ளன. 6க்கு உடையவன் வியாதி, கடன், கஷ்டத்தைக் கொடுப்பார். புதன் பாதகத்தைக் கொடுப்பார். 10 இல் பாவி இருந்தால் அரசனைப் போல யோகம் பெறக்கூடும் என்பது ஐதீகம். அதனால், உங்களுடைய வாழ்க்கையே மாறக்கூடும்.
லாபம் உயரும்
வியாபாரம், தொழிலில் ஏற்றம் பெறுவீர்கள். குரு 4 ஆம் இடத்துக்கு வருவதால் வேகம் குறைவதற்கான வாய்ப்பு ஏற்படும். ராசியில் சனி பகவான் வக்கிரமாக இருந்து இப்போது வக்கிர நிவர்த்தி அடைந்து விட்டார். 10 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் பெரும் புகழ் கிடைக்கும். புதன் பகவானும் 11 ஆம் இடத்துக்கு லாப ஸ்தானத்துக்கு வருவதால் நண்பர்கள், புதிய உறவுகள் மாமனார் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். லாபம் பன்மடங்காக உயரும்.
திருமண யோகம்
மற்றவர்கள் உங்களை மதிக்கக்கூடிய சூழல் ஏற்படும். ராசிநாதன் குரு பகவான் 7 ஆம் பார்வையாக 10 ஆம் இடத்தில் உள்ள கிரகங்களைப் பார்ப்பது விசேஷமான அமைப்பகும். இனி மீன ராசியினர் வீட்டில் சுபகாரியங்கள், சுபச் செலவுகள் நடக்கும். புதிய புதிய விஷயங்கள் அனைத்தும் கைகூடும். 7க்கு உடைய புதன் குரு பார்வை பெறுவதால் காதல் கைகூடும். திருமண யோகம் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
குரு பார்வை
சுக்கிரனை குரு பார்ப்பதால் பிரிந்த தம்பதி மீண்டும் சேரக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். 4, 7க்கு உடைய புதன் வீட்டில் குரு பகவான் 7 இல் இருப்பதால் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வி, உயர்பதவிகள் கிடைக்கும். சொந்த தொழில் தொடங்குவதற்கான யோகம் ஏற்படும். 2026 உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும்.
கவனம்
12 ஆம் இடத்தில் ராகு பகவான் இருப்பதால் பழைய வழக்குகள், விஷயங்கள் எல்லாம் தேவையில்லாமல் வெளியே வரும். அந்த விஷயங்களில் மிக கவனமாக இருப்பது நல்லது.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: மகரம், கும்பம், மீனம் ராசிக்கு அடிக்குமா ஜாக்பாட்?.. குருவின் அருள் கிடைக்குமா? -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications