தை மாத பலன் 2026: மேஷ ராசியினருக்கு தை மாதம் எப்படி இருக்கும்.. ஏற்றம் ஏற்படுமா?
தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனுடைய தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் மாதமே மகர மாதம். தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று பலர் காத்துக் கொண்டிருப்பார்கள். மகாபாரதத்தின் பிதாமகனான பீஷ்மர் இந்த தை மாதத்துக்காகவே அம்பு படுக்கையில் தன் உயிர் போவதற்காக காத்துக் கொண்டிருப்பாராம். அந்த அளவுக்கு புனிதமான மாதம்.

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதம். சூரியனை வழிபடும் பண்டிகையே பொங்கல் பண்டிகை. சூரியன் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது. இந்த தை மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசி அன்பர்களுக்கு செவ்வாய் பகவான் 9 ஆம் இடம் எனும் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது விசேஷமாகும். சூரிய பகவான் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிர பகவான் வீற்றிருக்கிறார். திடீர் லாபங்கள், புதையல் யோகங்கள் கிடைக்கும். வர வேண்டிய பாக்கித் தொகைகள் வந்து சேரும்.
வெளிநாடு செல்லும் யோகம்
வெளியூர், வெளிநாடு சென்று வரும் யோகம் ஏற்படும். செவ்வாய் பகவான் புதன் பகவானுடன் இணைந்திருப்பதால் ஏஜென்சி தொழிலில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய கமிஷன்கள் வரும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் தனித் தொழில் தொடங்கும் யோகம் ஏற்படும். சிவபெருமானை வழிபாடு செய்வது, சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்வது அற்புதமான முன்னேற்றத்தை தரும்.
ஆரோக்கியம்
ராசிக்கு கர்ம ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சூரிய பகவான் நுழைவதால் செல்வ செழிப்பு அதிகரிக்கும். உங்களுடைய ஆரோக்கியம் மேன்மை அடையும். நண்பர்கள் மற்றும் தாய் வழி தந்தை வழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசு அதிகாரிகள், உயரதிகாரிகளின் அறிமுகம், அவர்களுடைய ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
மகிழ்ச்சி
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். உங்களுடைய பொறுப்புகள் கூடும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications