தை மாத பலன் 2026: துலாம் ராசிக்கு விபரீத ராஜயோகம்.. வேலையில் மிகப்பெரிய மாற்றம் காத்திருக்கு
தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனுடைய தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் மாதமே மகர மாதம். தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று பலர் காத்துக் கொண்டிருப்பார்கள். மகாபாரதத்தின் பிதாமகனான பீஷ்மர் இந்த தை மாதத்துக்காகவே அம்பு படுக்கையில் தன் உயிர் போவதற்காக காத்துக் கொண்டிருப்பாராம். அந்த அளவுக்கு புனிதமான மாதம்.

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதம். சூரியனை வழிபடும் பண்டிகையே பொங்கல் பண்டிகை. சூரியன் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது. இந்த தை மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு 10 இல் இருந்த குரு பகவான் பெரிய ஆபத்தாக இருந்தது. இதனால், பலர் வேலையை இழந்திருப்பார்கள். இப்போது குரு பகவான் 10 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்குச் சென்றுள்ளார். அதிர்ஷ்டங்கள் நிறைய கிடைக்கும். பெரிய பதவிகள், உயர்கல்வியில் ஏற்றம் ஏற்படும். குரு பகவான் 7 ஆம் பார்வையாக அனைத்து கிரகங்களையும் பார்க்கிறார். 3 ஆம் இடத்தில் நிறைய கிரகங்கள் மறைந்திருப்பது பெரிய அதிர்ஷ்டங்களைக் கொடுக்கும்.
விபரீத ராஜயோகம்
ராசிநாதன் சுக்கிரன், புதன் 3 இல் மறைவதால் மிகப்பெரிய விபரீத ராஜயோகங்கள் கிடைக்கும். சூரியனும் 3 இல் மறைந்துள்ளதால் சொந்த சகோதரர்களாலேயே பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். 2, 7க்கு உடைய செவ்வாய் பகவான் 3 ஆம் இடத்தில் மறையும்போது பணவரவு இல்லாமல் போவதற்கான வாய்ப்பு ஏற்படும். 4 ஆம் இடத்தில் செவ்வாய் உச்சம் பெறும்போது பண வரவு அபரிமிதமானதாக இருக்கும்.
பணவரவு கொட்டும்
பணம் வரக்கூடிய சூழல் ஏற்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். திருமணமாகவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு திருமண யோகம் ஏற்படும். புதன் பகவான் 12, 9க்கு உடையவர் 4 ஆம் இடத்தில் உச்சம் பெறுகிறார். இதனால், அற்புதமான பலன்கள் கிடைக்கும். நிறைய பண வரவு ஏற்படும். பிரிந்திருந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேரும் யோகம் உண்டாகும்.
வேலை நிரந்தரமாகும்
வேலை நிரந்தரமாக இருக்கும். வேலை போய்விடும் என்ற அச்சத்தில் இருந்து விடுபடுவீர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். எதிரிகளிடம் இருந்து விடுதலை அடைவீர்கள். இதுவரை இருந்து வந்த தடைகள், தாமதங்கள் எல்லாம் அகலும். இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி, பண வரவு உண்டாகும். உயர்கல்வி, உயர்பதவிகள் கிடைக்கும் யோகம் ஏற்படும். சிறப்பு சிகிச்சைகளால் குழந்தை பாக்கியம் ஏற்படும்.
வழிபாடு
சனி பகவானுக்கு உரிய கருப்புச் சட்டைகளைப் போடுவது, எள்ளு சாதத்தை ஏழை எளியோருக்கு, காகத்துக்கு தானமாகக் கொடுப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். திருப்பாம்புபுரம் சென்று ராகு கேது பகவானை வழிபாடு செய்து வருவது ஏற்றத்தைக் கொடுக்கும். ராகு கேது தோஷம் உங்களை விட்டு விலகும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications