தை மாத பலன் 2026: ஜாவா சுந்தரேஷனாக மாறும் விருச்சிக ராசி.. இனி அடிப்பதெல்லாம் ஜாக்பாட்
தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனுடைய தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் மாதமே மகர மாதம். தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று பலர் காத்துக் கொண்டிருப்பார்கள். மகாபாரதத்தின் பிதாமகனான பீஷ்மர் இந்த தை மாதத்துக்காகவே அம்பு படுக்கையில் தன் உயிர் போவதற்காக காத்துக் கொண்டிருப்பாராம். அந்த அளவுக்கு புனிதமான மாதம்.

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதம். சூரியனை வழிபடும் பண்டிகையே பொங்கல் பண்டிகை. சூரியன் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது. இந்த தை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 2 ஆம் இடமான தன ஸ்தானத்தில் சுக்கிர பகவான், சூரியன், புதன், செவ்வாய் என அனைத்து கிரகங்களும் உள்ளன. நற்பலன்களை அள்ளிக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். உடம்பில் இருக்கும் நோய்கள் அனைத்தும் குணமாகக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
சோம்பல் நீங்கும்
எப்போதும் சோம்பலாக இருப்பதாக நினைத்த நிலைமைகள் மாறும். மனதில் இருந்து வந்த அழுத்தங்கள் அனைத்தும் தீரும். விடுதலை அடைந்தது போல உணருவீர்கள். ராசிநாதன் உச்சமடைவதால் காதல், இளைமை திரும்பும். காலையில் நேரத்தில் எழுந்திருப்பது, உங்களை நீங்களே சற்று மேம்படுத்திக் கொள்ளும் காலகட்டமாக இருக்கும்.
விபரீத ராஜயோகம்
உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் மாறும். மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். விபரீத ராஜயோகம் கிடைக்கும். சோம்பேறித்தனம் நீங்கும். கடன்களை அடைத்து முடிப்பீர்கள். உழைப்பால் முன்னேறக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொழிலில் உங்களுடைய கவனம் அதிகரிக்கும். புதிய பார்வை ஏற்படும். உழைப்புக்கான ஊதியம், அங்கீகாரத்தைப் பெறுவீர்கள்.
சொத்து வாங்கும் யோகம்
கடனை அடைப்பதற்கான எண்ணம் தோன்றும். கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புதன் பகவான் 3 ஆம் இடத்துக்குப் போவதால் விபரீத ராஜயோகம் ஏற்படும். சொத்துகள் வாங்குவதற்கான யோகம் ஏற்படும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். தை மாதம் முதல் சேமிப்பு அதிகரிக்கும், கடனை அடைப்பீர்கள், சொத்து வாங்குவீர்கள். பண வரவு அதிகரிக்கும்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications