Dhanusu Thai Matha Palan: தனுசு ராசிக்கு கொட்டி கொடுக்கும் குரு.. 30 நாட்களில் வரப்போகும் குட்நியூஸ்
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மகர மாதம்
சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். மகர மாதம் என்றும் கூறப்படுகிறது. சூரியனின் தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் காலம் தான் தை மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஐதீகம். மகாபாரதத்தின் பிதாமகரான பீஷ்மர் தை மாதத்தில் தனது உயிர் போவதற்கு அம்பு படுக்கையில் காத்துக் கொண்டிருந்தாராம். அந்த அளவுக்கு சிறப்பு பெற்றது தை மாதம். தேவர்களின் உதயகாலம் தை மாதம். இந்த தை மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

தனுசு தை மாத ராசி பலன் (Dhanusu)
தனுசு ராசிக்காரர்களுக்கு தன பாக்கியம் கை கூடும். பணம், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் நல்ல ஏற்றங்கள் உண்டாகும். வாழ்க்கைத் துணையில் மறைவுப் பகுதியில் பிரச்சனைகள் ஏற்படும். உங்களுக்கு கண், பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து போகும். கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். யாரிடம் நீங்கள் பணம் கேட்டாலும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குரு பார்வை
உங்கள் பேச்சில் மற்றவர்கள் பயந்தே அந்த காரியங்களை செய்து கொடுத்து விடுவார்கள். எதற்காகவும், யாருக்காகவும் டென்சன், கோபப்படத் தேவையில்லை. வார்த்தைக்கு மதிப்பு ஏற்படும். குரு பார்வை இருக்கும் வரை உங்களுக்குப் பிரச்சனையே இல்லை. குடும்பத்தில் பேச்சுக்கு மரியாதை இருக்கும். ஆனால், அதிகாரம் செய்வதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.
தொழில்
இரும்பு, ஜல்லி, மெட்டல் வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய ஏற்றம், வெற்றி ஏற்படும். கெமிக்கல் சார்ந்த எந்த தொழில் செய்தாலும் நன்றாக இருக்கும். டீ கடை, உணவுக் கடை வியாபாரம் செய்வோருக்கும் நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுடைய ஆரோக்கியம், துணையின் ஆரோக்கியத்தை பார்ப்பது நல்லது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.
சந்தோஷம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம், தொழில், உத்தியோகம், படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். இரட்டிப்பு லாபங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அற்புதமான காலகட்டமாக இருக்கும். பெரிய ஒரு சந்தோஷம் ஒரு மாதம் கழித்து கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வழிபாடு
ஆரோக்கியத்தை மட்டும் பார்த்துக் கொள்வது நல்லது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். ஆதிசேஷன் வழிபாடு உங்களுக்கு அனுகூலத்தை தரும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications