தை மாத ராசி பலன் 2023: தை பிறந்தால்..அதிர்ஷ்ட தேவதையின் பார்வை விழப்போகும் ராசிக்காரர்கள்
சென்னை: தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் பயணம் செய்வதால் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியன் தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில் சுயசாரம் பெற்று வர்க்கோத்தம பலமடைந்து மகர ராசியில் பிரகாசிப்பதால் புதிய உயிர்கள் உற்பத்தியாகின்ற மாதமாகவும் நம் உடம்பில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுகின்ற மாதமாகவும் தை மாதம் விளங்குகிறது. இந்த மாதத்தில் அதிர்ஷ்ட தேவதையின் பார்வை யார் மீது விழப்போகிறது என்று பார்க்கலாம்.

தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் ராகு அமர்ந்திருக்கிறார். ரிஷப ராசியில் செவ்வாய் வக்கிரமடைந்து பின்னோக்கி வந்திருக்கிறார். புதன் 4 ஆம் தேதி வக்கிர நிவர்த்தி அடைகிறார். 24 ஆம் தேதி மகர ராசிக்கு செல்கிறார். மீன ராசியில் குரு இருக்கிறார். விருச்சிகத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரன் 8 ஆம் தேதி மகர ராசிக்கு செல்கிறார். சனி மகரத்தில் அமர்ந்திருக்கிறார். தை 3 ஜனவரி 17ஆம் தேதி சனி கும்ப ராசிக்கு செல்கிறார். கேது துலாம் ராசியில் இருக்கிறார்.
நவ கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வையால் துலாம், விருச்சிகம்,தனுசு, மகரம்,கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த தை மாதத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் யாருக்கெல்லாம் திடீர் அதிர்ஷ்டமும் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
துலாம்

தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
கொழுப்பு சம்பந்தப்பட்ட எந்த உணவையும் சாப்பிடாதீங்க. இருதய அடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ பண்ணுற நிலை வரலாமுங்க. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை நடுத்தர வயசு காரங்க உடம்ப செக் பண்ணிக்கோங்க. வியாபாரத்தில் தில்லு முல்லு அறவே ஆகாதுங்க. அப்புறம் இருக்கிறதை இழந்துட்டு அம்போன்னு நிப்பீங்க. எஸ்எம்எஸ் அனுப்பி அனுப்பி ஒரு பொண்ணு மனசுல இடம் பிடிப்பீங்க. காதலை வளர்க்க கடன் வாங்கி செலவு செய்வீங்க. வியாபாரத்தில் திடீர் சறுக்கள் உண்டாகுமுங்க. அதை நிவர்த்தி செய்ய அரசாங்க கடன் வாங்குவீங்க. அரசாங்க ஊழியர்களுக்கு அவஸ்தை அதிகமாகுமுங்க.திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாளை வழிபடுங்க. சகல சௌபாக்கியங்களும் சித்திக்குமுங்க.
விருச்சிகம்

போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
பொருளாதாரம் முன்னேற்றத்திற்காக புதுப்புது யோசனைகளை வியாபாரத்தில் புகுத்துவீங்க. வசீகரமாக பேசி வாடிக்கையாளர்களை இழுத்து லாபத்தை அதிகரிப்பீங்க. குடும்ப உறவில் எச்சரிக்கையாக இருங்க. கும்மாங்குத்து நடவடிக்கையில் இறங்கினால் விவாகரத்து நோட்டீஸ் வீட்டுக்கு வந்து சேருமுங்க. வெட்டித்தனமாக வெளியூரில் அலையாதீங்க. அதனால கை காசு மட்டும் தான் செலவழியுமுங்க. புது வீடு கட்ட முயற்சி பண்ணுவீங்க. அதற்கான நடவடிக்கையில் இறங்கி வெற்றியும் தருவீங்க. கிளுகிளுப்பா பேசுற பெண்கள் பின்னாடி அலையாதீங்க. சிக்கலை சந்திப்பீங்க. குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு மருத்துவ செலவு பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்படுமுங்க.
பழனிமலை முருகனின் பாதம் பணியுங்க. கழனி செழித்து செல்வம் பெருகுமுங்க.
தனுசு

வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
அரசாங்க கடன்களை தவண தவறாமல் கட்டிவிடுங்க. இல்லைனா அமீனா வீட்டுக்கு வந்து கதவை தட்டு வாருங்க. வியாபாரம் மந்தமாகத்தான் நடக்குமுங்க. எந்த சூழ்நிலையிலும் அடுத்தவங்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. வண்டி வாகனங்கள் திடீர் திடீர்னு செலவு வைக்குமுங்க. நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நடந்த வழக்கு முடிவுக்கு வருமுங்க. உறவினர்கள் உங்களுக்கு எதிர்ப்பா நடப்பாங்க. உள்ளடி வேலை பார்ப்பாங்க. காதலுக்காக பெத்தவளங்களையே உதறிவிட்டு போற நிலை சில பிள்ளைகளுக்கு ஏற்படுமுங்க. இள வயதினரின் இந்த போக்கால் பெத்தவங்க மனம் உடைந்து போய்விடுவாங்க.
பட்டமங்கலம் சென்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வாங்க. தொட்டதெல்லாம் துலங்குமுங்க.
மகரம்

வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
உங்களுக்கு நீங்களே எதிரியாகிற நிலை ஏற்படலாமுங்க. வார்த்தை அளந்து பேசுங்க. தேவையில்லாத விஷயத்துல மூக்க நுழைக்காதீங்க. அடுத்த வீட்டு பஞ்சாயத்துக்கு முன்னாடி நிக்காதீங்க. இதையெல்லாம் உங்களுக்கு கெட்ட பேர மட்டும் இல்லாம குடும்பத்துல சிக்கலையும் கொண்டு வந்து சேர்க்குமுங்க. வியாபாரத்துல பக்குவமா நடந்துக்குங்க. ஆட்டம் போட்டா நஷ்டத்துல போயி நிப்பீங்க. தொழில் காரணமா சிலர் வெளிநாடு போவாங்க. அரசாங்க வேலை பார்ப்பவர்களுக்கு இடம் மாறுதல் கிடைக்குமுங்க. வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடக்குமுங்க. இளம் வயசு பிள்ளைங்க காதல் கத்தரிக்காயின் மனசை அலைபாய விடாதீங்க. படிப்பு கெட்டுப் போகுமுங்க.
திருநள்ளாறு தர்ப்ப ஆரண்ய ஈஸ்வரரை வழிபடுங்க. அவமிருத்த யோகம் விலகுமுங்க.
கும்பம்
சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
அவசரப்பட்டு தொழில்ல அதிகமா முதலீடு பண்ணாதீங்க. வியாபாரம் சீராக நடக்குமுங்க. கூட்டுத்தொழில் கொஞ்சம் பிரச்சனையை கொண்டு வருமுங்க. பெத்தவங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. உங்க உடம்ப பாத்துக்கோங்க. ஆஸ்துமா போன்று நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்குங்க. மாணவர்களே....மாணவிகள் மேல காதல் பார்வை வீசினால் அரியர் வைத்து அவஸ்தப்பட போவது நீங்க தாங்க. பொண்டாட்டி பேச்சைக் கேட்டு பெத்தவங்கள தள்ளி வச்சிடாதீங்க. பெண்களே... மாமனார் மாமியாருக்கு மரியாதை கொடுங்க. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்குமுங்க.
ஒத்தக்கடை யோக நரசிம்மரை வழிபடுங்க. ஆயுள் விருத்தியாகும்முங்க.
மீனம்
பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே...
இந்த மாதம் தொழில் வியாபாரம் ஆகியவற்றில் லாபம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுமுங்க. அரசாங்க வேலையில் இருப்பவர்கள் சம்பள உயர்வும் பதவி உயர்வும் பெறுவாங்க. தனியார் துறை ஊழியர்களுக்கும் இது யோகமான காலகட்டமுங்க. நீண்ட காலமாக தொந்தரவு கொடுத்த நோய் விலகுமுங்க. சிலருக்கு முதுகுத்தண்டு வலி ஏற்பட்டு கஷ்டப்பட்டுக்கிட்டு இருப்பாங்க. இப்ப மருத்துவர போய் பாருங்க. கூடிய சீக்கிரம் அதிலிருந்து நீங்க விடுபடுவீங்க. முழங்கால் வலி கை கால் வலி உள்ளவங்களுக்கெல்லாம் நிவாரணம் கிடைக்குமுங்க. சிங்கப்பூர் மலேசியா போன்ற அயல்நாடுகள்ல வேலை செய்றவங்க நாலு நம்பர் எடுங்க. திடீர் யோகம் அடிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்குங்க. அழகர்கோவில் கள்ளழகர் பெருமானை வழிபடுங்க. தொழில் விருத்தி அடையும்முங்க.
உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications