தை மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் 3 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
தை மாத ராசி பலன்: 2026 புத்தாண்டின் முதல் தமிழ் மாதமான தை மாதத்தில் பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி பெறக்கூடிய 3 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனுடைய தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் மாதமே மகர மாதம். தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று பலர் காத்துக் கொண்டிருப்பார்கள்.

மகாபாரதத்தின் பிதாமகனான பீஷ்மர் இந்த தை மாதத்துக்காகவே அம்பு படுக்கையில் தன் உயிர் போவதற்காக காத்துக் கொண்டிருப்பாராம். அந்த அளவுக்கு புனிதமான மாதம். இந்த தை மாதத்தில் பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி பெறக்கூடிய 3 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு மாற்றத்தை தரும் காலகட்டமாக இருக்கும். பெயர், புகழ், அந்தஸ்தம், கெளரவம் கிடைக்கும். காதல் மலரும். 7 ஆம் இடத்தில் 4 கிரகங்களின் சேர்க்கை உள்ளது. 5, 10க்கும் உடையவர் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். செவ்வாய் வலுத்திருப்பதால் ஆண்கள் வலிமையுடன் இருக்கக்கூடிய நேரமாக இருக்கும்.
இடம் வாங்கும் யோகம்
உடல் வலிமை அதிகரிக்கும். நம்பிக்கை கூடும். இடம் வாங்கக்கூடிய எண்ணம் தோன்றும். விட்ட தொழிலை மீண்டும் செய்யக்கூடிய குழப்பங்கள் வரக்கூடும். வருமானம் குறித்து அதிகளவில் யோசிக்கத் தொடங்குவீர்கள். 11 ஆம் இடத்தில் லாபத்தில் குரு அமர்ந்துள்ளார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.
செல்வாக்கு கூடும்
சமுதாயத்துடன் தொடர்பு ஏற்படும். உங்களுடைய மதிப்பு, மரியாதை செல்வாக்கு கூடும். பேசும் வார்த்தையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மற்றவர்கள் செய்யும் தவறுக்கு உங்களை நீங்களே வருத்திக் கொள்ளும் சூழல் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் சிறிது பொறுமையுடன் இருப்பது நன்மை பயக்கும். எல்லோரிடமும் கணிவாகப் பேசுவது நல்லது.
கவனம்
8 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் பேராசைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 2 ஆம் இடத்தில் கேது வரும்போது வருமானம் வரக்கூடிய இடத்தில் தடைகள் ஏற்படும். முதலீடுகள் செய்வதற்கு முன்பு யோசித்து செய்வது நல்லது. இல்லையெனில் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புலம்பல்கள் தீரக்கூடிய காலகட்டமாக இருக்கும். எல்லாவிதமான துன்பங்களில் இருந்தும் விலகி வரும் காலகட்டமாக இருக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 2 ஆம் இடமான தன ஸ்தானத்தில் சுக்கிர பகவான், சூரியன், புதன், செவ்வாய் என அனைத்து கிரகங்களும் உள்ளன. நற்பலன்களை அள்ளிக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். உடம்பில் இருக்கும் நோய்கள் அனைத்தும் குணமாகக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
சோம்பல் நீங்கும்
எப்போதும் சோம்பலாக இருப்பதாக நினைத்த நிலைமைகள் மாறும். மனதில் இருந்து வந்த அழுத்தங்கள் அனைத்தும் தீரும். விடுதலை அடைந்தது போல உணருவீர்கள். ராசிநாதன் உச்சமடைவதால் காதல், இளைமை திரும்பும். காலையில் நேரத்தில் எழுந்திருப்பது, உங்களை நீங்களே சற்று மேம்படுத்திக் கொள்ளும் காலகட்டமாக இருக்கும்.
விபரீத ராஜயோகம்
உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் மாறும். மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். விபரீத ராஜயோகம் கிடைக்கும். சோம்பேறித்தனம் நீங்கும். கடன்களை அடைத்து முடிப்பீர்கள். உழைப்பால் முன்னேறக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொழிலில் உங்களுடைய கவனம் அதிகரிக்கும். புதிய பார்வை ஏற்படும். உழைப்புக்கான ஊதியம், அங்கீகாரத்தைப் பெறுவீர்கள்.
சொத்து வாங்கும் யோகம்
கடனை அடைப்பதற்கான எண்ணம் தோன்றும். கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புதன் பகவான் 3 ஆம் இடத்துக்குப் போவதால் விபரீத ராஜயோகம் ஏற்படும். சொத்துகள் வாங்குவதற்கான யோகம் ஏற்படும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். தை மாதம் முதல் சேமிப்பு அதிகரிக்கும், கடனை அடைப்பீர்கள், சொத்து வாங்குவீர்கள். பண வரவு அதிகரிக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு 2026 தை மாதம் உங்களுக்கான மாதமாக இருக்கும். 2க்கு உடைய செவ்வாய் பகவான் 11 ஆம் இடத்தில் உச்சம் பெறுகிறார். அந்த அளவுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பிப்ரவரி இறுதி வரைக்கும் உங்களுக்கு அமோகமான நல்ல பலன்கள் கிடைக்கும். 10 ஆம் இடத்திற்கு அனைத்து கிரகங்களும் வந்திருக்கின்றன.
லாபம் உயரும்
வியாபாரம், தொழிலில் ஏற்றம் பெறுவீர்கள். குரு 4 ஆம் இடத்துக்கு வருவதால் வேகம் குறைவதற்கான வாய்ப்பு ஏற்படும். ராசியில் சனி பகவான் வக்கிரமாக இருந்து இப்போது வக்கிர நிவர்த்தி அடைந்து விட்டார். 10 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் பெரும் புகழ் கிடைக்கும். புதன் பகவானும் 11 ஆம் இடத்துக்கு லாப ஸ்தானத்துக்கு வருவதால் நண்பர்கள், புதிய உறவுகள் மாமனார் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். லாபம் பன்மடங்காக உயரும்.
திருமண யோகம்
மற்றவர்கள் உங்களை மதிக்கக்கூடிய சூழல் ஏற்படும். ராசிநாதன் குரு பகவான் 7 ஆம் பார்வையாக 10 ஆம் இடத்தில் உள்ள கிரகங்களைப் பார்ப்பது விசேஷமான அமைப்பகும். இனி மீன ராசியினர் வீட்டில் சுபகாரியங்கள், சுபச் செலவுகள் நடக்கும். புதிய புதிய விஷயங்கள் அனைத்தும் கைகூடும். 7க்கு உடைய புதன் குரு பார்வை பெறுவதால் காதல் கைகூடும். திருமண யோகம் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
குரு பார்வை
சுக்கிரனை குரு பார்ப்பதால் பிரிந்த தம்பதி மீண்டும் சேரக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். 4, 7க்கு உடைய புதன் வீட்டில் குரு பகவான் 7 இல் இருப்பதால் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வி, உயர்பதவிகள் கிடைக்கும். சொந்த தொழில் தொடங்குவதற்கான யோகம் ஏற்படும். 2026 உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும். 12 ஆம் இடத்தில் ராகு பகவான் இருப்பதால் பழைய வழக்குகள், விஷயங்கள் எல்லாம் தேவையில்லாமல் வெளியே வரும். அந்த விஷயங்களில் மிக கவனமாக இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications