தை மாத ராசி பலன் 2022: மிதுன ராசிக்காரர்களே நீங்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது தெரியுமா
தை மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதம். அஷ்டம ஸ்தானத்தில் சனி சூரியன் சேருவதால் கூடுதல் கவனம் தேவை.
சென்னை: மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு முக்கியமான கிரகங்கள் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்வதால் தை மாதம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டிய மாதமாக அமைந்துள்ளது. தை மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது, செவ்வாய், தனுசு ராசியில் சுக்கிரன், மகர ராசியில் சூரியன், சனி, புதன், கும்ப ராசியில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
கிரகப்பெயர்ச்சிகளைப் பார்த்தால் 1ஆம் தேதி மகர ராசியில் புதன் வக்ரம் ஆரம்பமாகிறது. 3ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பயணம் செய்கிறார். 16ஆம் தனசு ராசியில் சுக்கிரன் வக்ரம் முடிகிறது. 22ஆம் புதன் வக்ர முடிவுக்கு வருகிறது. 30ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார்.
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் விரைய ஸ்தானத்தில் ராகு, ஆறாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் சூரியன், சனி, புதன், ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன், பாக்ய ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.

மிதுனம்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே இந்த மாதம் நீங்கள் அதி கவனமாக இருப்பது நல்லது காரணம் எட்டாவது வீட்டில் சூரியன், சனி, மூன்று கிரகங்கள் இணைந்துள்ளன. அஷ்டமத்தில் இணைந்துள்ள கிரகங்களால் கவனமும் நிதானமும் தேவை. நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. கூடுமானவரைக்கும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது ரொம்ப நல்லது.

கோபத்தை தவிர்க்கவும்
ராசி நாதன் புதன் வக்ரமடைகிறார். அஷ்டம ஸ்தானத்தில் சனியோடு சூரியனும் புதனும் இணைந்திருப்பதால் வேலை செய்யும் இடங்களில் கவனமும் நிதானமும் தேவை. பூர்வீக சொத்து விசயங்களில் பின்னடைவை சந்திப்பீர்கள். சொத்துத்தகராறு வர வாய்ப்பு உள்ளது. அதிக கோபமும் மன அழுத்தமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொது இடங்களில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பெரிய அளவில் பண முதலீடுகள் செய்ய வேண்டாம்.

செலவுகள் அதிகமாகும்
விரைய ஸ்தானத்தில் உள்ள ராகுவினால் இந்த மாதம் செலவுகள் அதிகமாகும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபார ரீதியிலான முதலீடுகளில் கவனம். கணவன் மனைவி இடையே அவ்வப்போது சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. வாக்கு வாதம் வரும் போது விட்டுக்கொடுத்து செல்லவும். மூன்றாவது மனிதர்களை உங்களின் குடும்ப விவகாரங்களில் தலையிட விடாமல் இருப்பது நல்லது. வீட்டில் உள்ள பெரியவர்களின் சொல் பேச்சு கேட்டு நடப்பது நல்லது. குரு பகவானின் பார்வையால் சில நேரங்களில் நன்மைகள் நடைபெறும். மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம் பயணங்களால் நன்மை உண்டாகும்.

திடீர் திருமண யோகம்
சகோதர சகோதரிகளின் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளால் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைந்த பின்னர் சுப காரியங்கள் நடைபெறும். திடீர் திருமண யோகம் வரும். பொருளாதார பிரச்சினைகள் தலையெடுக்கும் கவனம் தேவை. தை திருநாளில் குலதெய்வத்தை வணங்க மறக்காதீர்கள். கன்னிப்பெண்கள் திருமண தடைகள் மஞ்சள் குங்குமம் வாங்கி தானம் தரலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications