Rasi Palan: தை மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
Thai matha rasi palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. கிரகங்களின் இடப்பெயர்ச்சி காரணமாக 12 ராசிகளிலும் அதன் தாக்கம் ஏற்படும். அந்த வகையில், இந்த தை மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். 2026 புத்தாண்டில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த தை மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிக்காரர்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கும்பம் தை மாத ராசி பலன் (Kumbam)
கும்ப ராசிக்காரர்களுக்கு ராசியாதிபதி 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். விரய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் சேருகின்றன. சந்திரன் சேரும்போதெல்லாம் ஆரோக்கியத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். தேவையில்லாத பஞ்சாயத்துகள், சண்டை, சச்சரவுகள், நிலத் தகராறில் சிக்கும் சூழல் ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்வது, காதல் திருமணம் செய்வது, வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்வது போன்றவை அனைத்தும் நடக்கும் காலகட்டம்.
குரு ராகுவுடன் விரயத்தில் இணைந்துள்ளதால் எதுவெல்லாம் செய்யக் கூடாதோ அவற்றை எல்லாம் செய்வீர்கள். செவ்வாய் உச்சம் பெற்றிருக்க ஸ்தானம் என்பதால் நிறைய பேர் வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்வீர்கள். சிலருக்கு மறைமுகமான உறவுளால் பிரச்சனைகள், பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு கால் பாதங்களில் பிரச்சனைகள் இருக்கும்.
குரு பார்வை ராசி, லக்கினம் மேலம் இருப்பதால் பெரிதாக பிரச்சனைகள் வரப்போகிறது என்றிருக்கும் பிரச்சனைகள் எல்லாம் கொஞ்சம் மாறும். எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லாமல் இருந்தாலே ஜெயிக்கக்கூடிய யோகம் ஏற்படும். வெளியூரில் வேலை கிடைத்தாலும் இப்போது செல்வது நல்லது.
சுப்பிரமணியர் வழிபாடு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதாரமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.
துலாம் தை மாத ராசி பலன் (Thulam)
துலாம் ராசிக்காரர்களுக்கு வீடு, நிலம், வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை மிகவும் தேவை. அவர்களுடைய நெஞ்சகம், நுரையீரல் போன்றவற்றில் பாதிப்பு, உடல் சூடு ஏற்படும் வாய்ப்புள்ளது. மோர் அதிகளவில் அருந்துவது நன்மை பயக்கும். பாக்கிய ஸ்தானத்தில் குரு இருப்பதால் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். சொந்த பந்தங்களை ஒதுக்கி வைத்துக் கொள்வது நல்லது. அம்மாவுடைய உறவுகள் மூலமாக சில பிரச்சனைகள், சண்டைகள் வரும் வாய்ப்புள்ளது.
உங்கள் வீட்டில் நிறைய செலவுகள் ஏற்படும். அற்புதமான யோகங்கள் ஏற்படும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. ரத்த அழுத்தம், கொழுப்பு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. உடற்பயிற்சியை செய்வது நல்லது. பணம் வரக்கூடிய சூழல் ஏற்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். திருமணமாகவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு திருமண யோகம் ஏற்படும்.
மிதுனம் தை மாத ராசி பலன் (Mithunam)
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு வக்கிரமாக உங்கள் ராசி, லக்கினத்தில் இருப்பது எதிர்மறையான விஷயமாகும். அஷ்டமத்தில் நிறைய கிரகங்கள் சேருவதால் விபத்துகளில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள கூடாது. இரவு நேர பயணத்தில் கவனம் தேவை. வண்டி வாகனத்தில் பழுதுகள் வந்தால் அதனை உடனடியாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
யாரோ செய்த பிரச்சனைகளுக்கு நீங்கள் சிக்கும் சூழல் ஏற்படும். வண்டி வாகனங்களில் பிரச்சனைகள் வந்தால் உடனடியாகப் பாரத்துக் கொள்வது நன்மை. தேவையில்லாத செலவுகள் ஏற்படும். அஷ்டமத்தில் இவ்வுளவு கிரகங்கள் காலபுருஷனுக்கு 10 ஆம் வீடு என்பதால் நீங்கள் படும் அசிங்கம், அவமானத்திற்கு பதில் கிடைக்கும். வேலையில் பளு அதிகமாக இருக்கும். பெரிய வருமானத்தையும், பண வரவையும், பொருளாதார ஏற்றத்தையும் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும்.
தாய், தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது ஏற்றத்தைக் கொடுக்கும். எந்தவொரு விஷயத்தையும் வெளிப்படையாகப் பேசுவது தவிர்ப்பது நல்லது. நீங்கள் ஒன்று பேச மற்றவர்கள் வேறொரு விதமாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புள்ளது. வைத்தீஸ்வர சுவாமியை வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 70 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்! -
Guru Peyarchi: மீனம் ராசிக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில்! குருப்பெயர்ச்சி தரும் அசத்தல் பலன்கள் -
பத்ர ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. இந்த 5 விஷயம் உங்களுக்கு கண்டிப்பா நடக்கும் -
Guru Peyarchi: கும்ப ராசிக்கு காத்திருக்கும் ஆபத்து.. இந்த விஷயங்களில் மிகுந்த கவனம் அவசியம் -
Guru Peyarchi: மகர ராசிக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை.. இந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் -
Guru Peyarchi: தனுசு ராசியினரே தயாராகுங்கள்! குரு தரப்போகும் அபார யோகங்கள் -
விருச்சிகத்துக்கு பொற்காலம் ஆரம்பம்.. குருவின் அருளால் வரப்போகும் ராஜயோகம் -
Guru Peyarchi: கிங்காக மாறப்போகும் துலாம் ராசி.. 10 இல் வரும் குரு அள்ளித் தரும் அதிர்ஷ்ட யோகங்கள் -
Guru Peyarchi: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் குருப்பெயர்ச்சி.. வாழ்க்கையை மாற்றும் 3 விஷயங்கள் -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. வேலையில் முன்னேற்றம் -
ஆனி மாத பலன்கள்: கடக ராசிக்கு வச்ச குறி தப்பாது.. ஜூலை 1க்கு பிறகு ராஜயோகம்.. பேச்சு தான் பிரச்சனையே -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள்












Click it and Unblock the Notifications