Rasi Palan: தை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்.. உங்க ராசி லிஸ்ட்ல இருக்கா பாருங்க
Thai matha rasi palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. கிரகங்களின் இடப்பெயர்ச்சி காரணமாக 12 ராசிகளிலும் அதன் தாக்கம் ஏற்படும். அந்த வகையில், இந்த தை மாதத்தில் எல்லா விஷயத்திலும் முதலிடம் பிடிக்கும் 3 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். 2026 புத்தாண்டில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த தை மாதத்தில் எல்லா விஷயத்திலும் முதலிடம் பிடிக்கும் 3 ராசிக்காரர்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம் தை மாத ராசி பலன் (Mesham)
மேஷம் ராசிக்காரர்களுக்கு தை மாதம் அற்புதமான காலகட்டமாக இருக்கும். உத்தியோகம், வியாபாரம், படிப்பு, தொழில் ரீதியாக அனைத்து முன்னேற்றங்களும் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷமும், ஏற்றமும் கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நல்லவை நடக்கும்.
தொழில்
சூரியன் 10 ஆம் வீட்டிற்கு வந்திருப்பதால் தை, மாசி மாதத்தில் தொழிலை நிலைப்படுத்திக் கொள்வது நல்லது. சோம்பலைத் தவிர்ப்பது ஏற்றத்தைத் தரும். குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் அதிகளவில் சந்தோஷமும், அக்கறையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பணத்தை வீண் விரயத்தை செய்யாமல் சேமிப்பு செய்ய வேண்டும்.
கவனம்
தனிப்பட்ட முறையில் நல்ல விஷயங்கள் நடக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். துர்க்கை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் உச்சமாகி இருப்பதால் நிலம், விவசாயம் சம்பந்தப்பட்ட விஷயங்களை செய்து முடிக்கக் கூடிய நல்ல காலகட்டம்.
சிம்மம் தை மாத ராசி பலன் (Simmam)
சிம்ம ராசிக்காரர்கள் கோர்ட், கேஸ், வழக்கு, வம்பு, பிரச்சனை இருந்தாலும் அதில் நீங்கள் ஜெயிப்பீர்கள். உங்கள் எதிரிகள் உங்களிடம் சரணடையக் கூடிய காலகட்டமாக இருக்கும். வீட்டில் தீ விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் தீ தொடர்பான சிறிய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உடம்பில் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கிட்னியில் கல், நரம்புகள் பாதிப்பு, ஹிரண்யா தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும், முடி கொட்டும். நன்றாக எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.
ராஜகிரகங்கள் அமரும்போது வெற்றி உங்கள் வசமாகும். போராட்டம் செய்தாலும் அதில் நீங்கள் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எந்த விஷயத்தில் இதுவரை தோல்வி அடைந்தீர்களோ அந்த விஷயம் உங்களுக்கு சாதகமாக முடியும். விட்டுக் கொடுக்கும் எண்ணம் ஏற்படாது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, திருமண யோகம் பெறுவது போன்ற யோகம் உண்டாகும். வீடுகளை விஸ்தீரணம் செய்வீர்கள். புதிய லோன்கள் கிடைக்கும். எல்லா விதமான யோகங்களும் உங்களுக்கு உண்டு. அற்புதமான முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். ஆனால், வீட்டில் மட்டும் தங்கக்கூடிய சூழல் வராது. சுதர்சனர் வழிபாடு செய்வது, சுதர்சனர் சக்கர ராஜ பூஜை செய்வது பெரிய மாற்றமும், ஏற்றமும் ஏற்படும்.
தனுசு தை மாத ராசி பலன் (Dhanusu)
தனுசு ராசிக்காரர்களுக்கு தன பாக்கியம் கை கூடும். பணம், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் நல்ல ஏற்றங்கள் உண்டாகும். வாழ்க்கைத் துணையில் மறைவுப் பகுதியில் பிரச்சனைகள் ஏற்படும். உங்களுக்கு கண், பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து போகும். கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். யாரிடம் நீங்கள் பணம் கேட்டாலும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குரு பார்வை உங்கள் பேச்சில் மற்றவர்கள் பயந்தே அந்த காரியங்களை செய்து கொடுத்து விடுவார்கள்.
எதற்காகவும், யாருக்காகவும் டென்சன், கோபப்படத் தேவையில்லை. வார்த்தைக்கு மதிப்பு ஏற்படும். குரு பார்வை இருக்கும் வரை உங்களுக்குப் பிரச்சனையே இல்லை. குடும்பத்தில் பேச்சுக்கு மரியாதை இருக்கும். ஆனால், அதிகாரம் செய்வதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். இரும்பு, ஜல்லி, மெட்டல் வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய ஏற்றம், வெற்றி ஏற்படும்.
கெமிக்கல் சார்ந்த எந்த தொழில் செய்தாலும் நன்றாக இருக்கும். டீ கடை, உணவுக் கடை வியாபாரம் செய்வோருக்கும் நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுடைய ஆரோக்கியம், துணையின் ஆரோக்கியத்தை பார்ப்பது நல்லது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பெரிய ஒரு சந்தோஷம் ஒரு மாதம் கழித்து கிடைக்கும் வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications