Rasi Palan: தை மாதத்தில் வெற்றியைக் குவிக்கும் 3 ராசியினர்.. தொட்டதெல்லாம் தங்கமாகும்
Thai matha rasi palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. கிரகங்களின் இடப்பெயர்ச்சி காரணமாக 12 ராசிகளிலும் அதன் தாக்கம் ஏற்படும். அந்த வகையில், இந்த தை மாதத்தில் எல்லா விஷயத்திலும் முதலிடம் பிடிக்கும் 3 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். 2026 புத்தாண்டில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த தை மாதத்தில் எல்லா விஷயத்திலும் முதலிடம் பிடிக்கும் 3 ராசிக்காரர்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மகரம் தை மாத ராசி பலன் (Magaram)
மகர ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். 4 கிரகங்களில் 2 ராஜ கிரகங்கள் லட்சுமி நாராயண யோகம், புதாதித்ய யோகத்தைக் கொடுக்கிறது. பலத்தைக் கொடுக்கக் கூடிய கிரகங்கள் இருப்பதால் எடுத்த காரியங்களில் ஜெயிக்கும் யோகம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு பெரிய யோகம் ஏற்படும்.
வெற்றி மேல் வெற்றி
அரசு அதிகாரிகளுக்கு, மின்சார வாரியம், நெடுஞ்சாலைத் துறை, அரசு ஆசிரியர்களுக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கும். இதுவரை வேலையில்லாமல் தவித்து வந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மிகப்பெரிய வெற்றிகளைக் காணக்கூடிய காலகட்டமாக இருக்கும். வழக்குப் பிரச்சனைகளில் மிகுந்த கவனம் தேவை. அடிவயிறு, உஷ்ணம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
வீடு வாங்குவதற்கான கடன், தொழில், வியாபாரம் செய்வதற்கான கடன், புதிய வேலைகளை ஆரம்பிப்பது, அதில் வெற்றி பெறுவது என அற்புதமான காலகட்டமாக இருக்கும். உத்தியோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கைப்பற்றும் யோகம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். ஆதிசேஷன், வைத்தீஸ்வரன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
ரிஷபம் தை மாத ராசி பலன் (Rishabam)
ரிஷப ராசிக்காரர்களுக்கு பாக்கியமான காலகட்டமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். மூதாதையர் செய்த புண்ணியங்கள் உங்களுக்கு வந்து சேரும். கோர்ட், கேஸ், வம்பு, வழக்கு, சண்டை, பிரச்சனை, பஞ்சாயத்துகள் தீரும். பூர்வீக சொத்துகள், நிலபுலன்கள் கிடைக்கும் யோகம் உண்டாகும். தந்தையின் மூலமாக பணம் வந்து சேரும். அரசு மூலமாக வரக்கூடிய விஷயங்கள் அனைத்தும் கிடைக்கும். நிறைய பரிசகள், டொனேஷன் வரக்கூடிய வாய்ப்புள்ளது. கோவில் நடத்தக் கூடியவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
தர்ம கட்டளைகள், அறக்கட்டளைகள் நடத்துவோருக்கு வெற்றிகள் கிடைக்கும். பெயர், புகழ் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பெயரும், புகழும் ஓங்கும். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய யோகம் ஏற்படும். பயணங்களில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். பிரம்மாண்டமான வாகன யோகம் ஏற்படும். உங்களுக்குப் பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். சுவாமி தரிசனம் செய்வது, குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
கன்னி தை மாத ராசி பலன் (Kanni)
கன்னி ராசிக்காரர்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய காலகட்டம். ராஜா மாதிரி வாழப்போறீங்க. உங்களுடைய பிள்ளைகள் கொடிகட்டிப் பறக்கும் யோகம் உண்டாகும். விளையாட்டுத் துறையில் பெரியளவில் ஜெயிக்கும் யோகம் ஏற்படும். நிறைய போட்டிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். வீடு, நிலம், இடம் வாங்குவதற்கான யோகம் ஏற்படும்.
பணம் குவியக்கூடிய யோகம் ஏற்படும். மற்றவர்கள் உங்களை எதிர்க்கவே பயப்படுவார்கள். உங்களிடம் வந்து சரணாகதி அடைவார்கள். மற்றவர்களுக்கு பயத்தைக் கொடுக்கக்கூடிய நிலை வரும். பின் முதுகு, பின்பகுதி, காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தை மட்டும் பார்த்துக் கொள்வது நல்லது. வாழ்க்கையில் இதுபோன்ற நல்ல நேரம் இனி வரவே வராது. அந்த அளவுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
பூர்வீக சொத்துகள் சார்ந்த பிரச்சனைகள், பஞ்சாயத்துகள் நீங்கும். லீடர்ஷிப், கேப்டன்ஷிப் வந்து சேரும். நல்ல நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சினிமா துறையில் இருப்பவர்களுக்கு பெரிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நம்பிக்கை பலமடங்கு உயரும். மீடியா துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும்.












Click it and Unblock the Notifications