ஜாக்பாட் அடிக்கும் சிம்மம் ராசியினர்.. சூரியனின் அருளால் இனி தொட்டதெல்லாம் துலங்கப் போகுது

Subscribe to Oneindia Tamil

மாசி மாதம்: தமிழ் மாதங்களின் அடிப்படையில் நாம் தற்போது தை மாத இறுதியல் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில்(13.2.2025 தேதி முதல் 14.3.2025 தேதி வரை) கிரகங்களின் மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சிம்மம் ராசியில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களை காணலாம்.

உங்கள் ராசியின் இரண்டாம் இடமான தனம், வாக்கு ஸ்தானத்தில் கேது அமர்ந்திருக்கிறார். ராசிக்கு ஏழாம் இடமான களஸ்திர ஸ்தானத்தில் சனி, புதன், சூரியன் ஆகிய 3 கிரகங்கள் உள்ளன. எட்டாம் இடமான அஸ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று ராகுவுடன் இணைந்திருக்கிறார்கள். ராசிக்கு 10ஆம் இடமான தொழில் கர்ம ஸ்தானத்தில் குரு பகவான் உள்ளார். சுக்கிரன் - குரு பரிவர்த்தனை நடைபெறவுள்ளது. ராசிக்கு 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் செவ்வாய் வக்கிரமாக அமர்ந்துள்ளார்.

Masi Simmam

மாசி 1 ஆம் தேதி (13.2.2025) உங்கள் ராசி அதிபதியான சூரிய பகவான் ஏழாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். இது மிகவும் நல்ல விஷயம். மாசி 12 ஆம் தேதி (24.2.2025) உங்கள் 4 மற்றும் 9 ஆம் இடத்துக்கு அதிபதியான செவ்வாய் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இது ஓரளவுக்கு நல்ல பலன்களை தரும் மாசி 15 ஆம் தேதி (27.2.2025) புதன் ஏழாம் இடத்தில் இருந்து எட்டாம் இடத்துக்கு பெயர்ச்சியாக உள்ளார்.

மீனம் ராசியில் புதன் நீசமாகப் போகிறார். அதே ராசியில் சுக்கிரன் உச்சத்திலும், குரு பரிவர்த்தனையால் நீட்சபங்க ராஜயோகம் கிடைக்கும். மாசி 17 ஆம் தேதி (1.3.2025) சுக்கிரன் வக்கிரமாக போகிறார். 3ஆம் அதிபதி எட்டில் வக்கிரமாக போகிறார். சுக்கிரனின் நகர்வை முக்கியமாக பார்க்க வேண்டும்.

சூரியன் தான் உங்கள் ராசிநாதன். இதுவரை சூரியன் ஆறாம் இடத்தில் இருந்தார். பிரச்னைகள் தானாக உருவாகிக் கொண்டிருக்கும். சூரிய பகவான் ஏழாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆவதால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். பெயர், புகழ் உயரும்.

கணவன் - மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். இந்த காலம் நல்ல நண்பர்களை அடையாளம் காட்டும். கண்டக சனி நடக்கும் நிலையில், சூரியன் சனியை அஸ்தமனம் செய்கிறது. இதனால் உங்கள் ஆளுமைத்தன்மையால் பிரிந்து சென்றவர்கள் உங்களிடம் சரண்டரடைவார்கள். பழைய பாக்கி வசூலாகும்.

உயர் பதவிகள் தேடி வரும். உங்கள் திறமை செயல் நன்கு வெளிப்பட்டு பிரபலமடைவீர்கள். வெளிநாடு, வெளிமாநில பயணங்களால் லாபம் உண்டு. கடன் குறையும். எதிரிகள் பலம் குறையும். உங்களுக்கும், உங்கள் தந்தைக்கும் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். செவ்வாய் உங்கள் பாக்கிய, சுக ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் வக்கிர நிவர்த்தி ஆன பிறகு நிலம் மற்றும் வாகனத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

மருத்துவம், சீருடைப் பணியாளர்கள், விவசாயம், கட்டிடம் சம்பந்தப்பட்டவர்களுக்கு பணி மற்றும் தொழிலில் ஜாக்பாட் அடிக்கும். பொறுப்புகளை சரியாக பயன்படுத்தி சாதனை படைப்பீர்கள். இறங்கிய காரியத்தில் எல்லாம் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பார்த்ததை விட அதிகளவு வருவாய் கிடைக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.

மாத தொடக்கத்தில் தாய் வழி உறவுளால் சில சங்கடங்கள் வரலாம். வாழ்க்கை துணை மற்றும் தாய் மாமாவின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம். யாருக்காகவும் சிபாரிசு செய்ய வேண்டாம். உங்கள் முக்கியமான ஆவணங்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். சுக்கிரன் வக்கிரம் அடைவதால் பணிச்சுமை அதிகரிக்கும். காரியங்களில் ஆங்காங்கே தடைகள் இருக்கும். அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் பிரச்னைகள் நீங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+