ஏழரை சனியே வந்தாலும் கவலை வேண்டாம்.. சனி பகவானுக்கு பிடித்த 4 ராசிகள்
சனி பகவான்: ராசிக்கு சனி பகவான் வருகிறார் என்றாலே எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் பயப்பட தான் செய்வார். சனி வந்தால் பரிகாரங்களை தேடுமளவுக்கு அது கடினமான காலமாக இருக்கும். அதேநேரத்தில் சனி பகவானுக்கு பிடித்த ராசிகள் உள்ளன. அந்த ராசிகளுக்கு பெரியளவுக்கு பாதிப்புகள் இருக்காது. அந்த 4 ராசிகளை தான் இந்த தொகுப்பில் காண உள்ளோம்.
சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்பது ஜோதிட பழமொழி. அந்தளவுக்கு கிரகங்களில் சனி மிகவும் பலம் வாய்ந்தது. நல்லது – கெட்டது என்று இரண்டுமே உச்சத்தில் இருக்கும். அதுவும் ஏழரை சனி காலத்தில் படாதபாடு பட வேண்டியிருக்கும். இதுதவிர கண்ட சனி, அஷ்டமத்து சனி, ஜென்ம சனி என்று பல்வேறு அமைப்புகள் உள்ளன. பொதுவாக சனி அவரவர் செயல்களுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும்.

பெரும்பாலும் கண்ட சனி, ஏழாம் சனியின்போது சனி கிரகத்தில் கெடு பலன்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதேநேரத்தில் ஜோதிட கணக்கியல்படி ஒவ்வொரு கிரகங்களுக்கும் பிடித்தமான ராசிகள் இருக்கின்றன. அந்த வகையில் சனி கிரகத்துக்கும் நட்பு ராசிகள் இருக்கின்றன. அந்த ராசிகளுக்கு சனி தோஷம் ஏற்படாமலும், சனி பகவானின் கெடு பலன்களை அனுபவிக்காமல் நல்லதை மட்டுமே செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
சனி பகவான் கொடுக்க நினைத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. அதேபோல சனி பகவான் தீங்கு ஏற்படுத்தினால் அதை தாங்க முடியாது. சனி பகவானுக்கு பிடித்த ராசிகள் தீங்குகளை எதிர்கொள்ள மாட்டார்கள். அப்படி சனி பகவானுக்கு பிடித்த 4 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
ராசிகள் வரிசையில் சனி பகவானுக்கு இஷ்டமான ராசிகளில் ரிஷபம் முதல் இடத்தில் உள்ளது. ரிஷபம் ராசியினருக்கு சனி பகவானின் அருள், ஆசி எல்லா காலத்திலும் இருக்கும். ரிஷபம் ராசிக்கு சுக்கிரன் தான் அதிபதி. பொதுவாக சுக்கிரன் மற்றும் சனி நட்பு கிரகம் என்பதால் சனி ரிஷபத்துக்கு நற் பலன்களை மட்டுமே தருவார்.
இந்த வரிசையில் சனி பகவானுக்கு துலாம் ராசியும் உள்ளது. பொதுவாக சனி பகவான் வேற்று கிரகத்துடன் அமைந்திருக்கும் காலத்தில் துலாம் ராசியினருக்கு அருமையான பலன்களை அள்ளி தருவார். அதிலும் அந்த காலங்களில் சுப காரியங்கள் கைக்கூடி மகிழ்ச்சி பொங்கும்.
சனி பகவானுக்கு பிடித்த ராசிகளில் மகரம் ராசியும் உள்ளது. மகரம் ராசிக்கு சனி தான் ராசி அதிபதி ஆவார். அதனால் பெரியளவுக்கு பிரச்னைகளை எதிர்கொள்ள மாட்டார்கள். ஏழரை சனி காலமாகவே இருந்தாலும் கூட இவர்கள் பெரியளவுக்கான கஷ்டங்களை சந்திக்க மாட்டார்கள்.
இந்த வரிசையில் சனி பகவானுக்கு மிகவும் பிடித்த ராசியில் கும்பம் ராசி இடம்பெற்றுள்ளது. கும்பம் ராசிக்கும் சனி தான் ராசி அதிபதியாக உள்ளார். அதனால் கும்பம் ராசிக்கு சனி எப்போதும் கருணையுடன் நற்பலன்களை மட்டுமே கொடுப்பார். கெடு பலன்கள் எட்டிக்கூட பார்க்காது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications