Thulam: லட்சுமி நாராயண யோகத்தால் துலாம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் ஹிட்டு
நவம்பர் மாத ராசி பலன்: 2025 ஆம் வருடம் இப்போதுதான் பிறந்தது போல உள்ளது. அதற்குள் 11வது மாதமான நவம்பர் மாதம் பிறக்க போகிறது. இந்த வருடத்தில் ஏற்கனவே கிரக நிலைகளில் ஏராளமான மாற்றங்களை சந்தித்துவிட்டோம். நவம்பர் மாதத்திலும் கிரக நிலைகளில் மாற்றங்கள் காணப்படும். இது சில ராசிகளுக்கு நற்பலன்களை கொடுக்கும். சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையும் வரலாம். நவம்பர் மாதம் துலாம் ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்தில் இருக்கிறார். அவர் நவம்பர் 11 ஆம் தேதி வக்ர கதி அடைகிறார். பொதுவாக சில ராசிகள் குரு பகவான் உச்சமடைந்தாலே நல்ல பலன்களை பெறுவார்கள். சில ராசிகள் குரு பகவான் உச்சத்தில் இருந்து வக்ரமானால் நல்ல பலன்களை பெறுவார்கள். மேலும் இந்த நவம்பர் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

நவம்பர் மாத பலன்கள்
சூரியன், சுக்கிரன் இணைந்து மூல திரிகோண வீட்டில் இருக்கிறார்கள். இதில் சூரியன் நீசமடைந்தாலும் நீட்ச பங்க ராஜயோகம் கிடைக்கப் போகிறது. மேலும் சுக்ரன், புதன் இணைந்து லட்சுமி நாராயண யோகம் தரப்போகிறார்கள். சூரிய பகவான் 16 ஆம் தேதிக்கு பிறகு செவ்வாயின் வீடான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதே வீட்டில் 26 ஆம் தேதிக்கு பிறகு சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். ஏற்கனவே அங்கு செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். தவிர குருவின் பார்வையும் உள்ளது.
சூரியனும், செவ்வாயும் இணைவது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். இதனால் அரசு, அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் மிகப்பெரிய ஏற்றம் காண்பார்கள். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல யோகம் கிடைக்கும். இந்த கிரக நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் துலாம் ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.
துலாம்
துலாம் ராசி மற்றும் துலாம் லக்னத்தினருக்கு அருமையான மாதமாக இருக்கும். ராசியாதிபதியாக இருக்கக்கூடிய சுக்கிர பகவான் உங்களை ஆளக் கூடியவர். கண்டங்கள், மனதில் இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் விலகும். கடின உழைப்பை போட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு சுக்கிரன் உள்ளே வந்ததும் மகிழ்ச்சி பெருகும். நல்ல பண வரவு உண்டாகும்.
யோகம்
புதனுடன், சுக்கிரன் சேர்ந்து நிற்கும்போது யோகத்தை வாரி வழங்குவார். தந்தையின் மூலமாக, சொத்துகள், வியாபாரம் மூலமாக யோகம் உண்டாகும். பயணங்களால் அனுகூலம், மகிழ்ச்சி ஏற்படும். மன அழுத்தத்தில் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும். நல்ல விஷயங்கள் அனைத்தும் கைகூடி வரும். புதன், சுக்கிரன் சேர்வதால் பணப் புழக்கம் ஏற்படும்.
லட்சுமி நாராயண யோகம்
துலாம் ராசிக்கு இந்த மாதம் லட்சுமி நாராயண யோகம் உண்டாகும். பெருமாளுடைய அருள் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு இருக்கும். நன்மைகளை அதிகளவில் பெறும் நேரமாக இருக்கும். பொருளாதாரம் அற்புதமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உழைப்புக்கு உண்டான ஆதாயத்தைப் பெறுவீர்கள்.
தேவைகள் பூர்த்தியாகும்
ஜாதகத்தில் 28 ஆம் தேதி வரை வக்கிரமாக இருந்தால் ஆரோக்கியம், குடும்பம், குழந்தைகள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வது நல்லது. 28 ஆம் தேதிக்குப் பிறகு வக்கிர நிவர்த்தி அடைவதால் வீடு, மனை, சொத்துக்கள் சார்ந்த விஷயங்கள் எல்லாம் மெதுவாக நடக்க ஆரம்பிக்கும். தேவைகளைப் பூர்த்தி செய்து, உங்களுக்குத் தேவையானவற்றை சேமித்துக் கொள்வது நல்லது.
பணவரவு
இந்த மாதம் துலாம் ராசியினருக்கு கண்டிப்பாக திருமணம் கைகூடி வரும். திருமணம் கட்டாயமாக நடக்கும். நண்பர்கள், சக ஊழியர்கள், குடும்பத்தினருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். லாப ஸ்தானதிபதி சூரியன் நீசபங்க ராஜயோகத்தைப் பெற்று 16 ஆம் தேதிக்கு மேல் குரு பார்வையில் செவ்வாயுடன் சேரப் போகிறது. லாபங்கள் வந்து சேரும். பண வரவு தடையில்லாமல் வந்து சேரும்.
பாதிப்புகள் இல்லை
தொழில் ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் வரலாமே தவிர பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. தைரியமாக இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். அடுத்த பதவியை நோக்கி ஓடத் தொடங்குவீர்கள். பதவி சார்ந்த விஷயத்தில், தொழில் சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி உங்களுக்கு யோகமான மாதமாக இருக்கும்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications