துலாம் ராசிக்கு 90% அட்டகாசமான பலன்கள்.. பணவரவு, திருமணம், கடன் தீரும் யோகம்
Weekly Rasi Palan: ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு மிக முக்கியமான காலகட்டம். விரயத்தில் சுக்கிரன் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தேவையில்லாத விரயங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பெண்களுடைய ஆரோக்கியம், தவறான சகவாசங்களால் பிரச்சனைகள் வரலாம். ஒரு சிலருக்கு சர்க்கரை அதிகரிப்பது, கிட்னி செயல்பாடுகளில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது.
அனுகூலம்
லாபத்தில் அமர்ந்திருக்கும் சூரியன், புதன், கேதுவால் பெரிய அரசியல்வாதிகள் அல்லது பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாவதற்கான வாய்ப்பு ஏற்படும். அரசுத் துறையில் இருக்கும் நபர்கள் உங்கள் சாதகமாக நடப்பதற்கான வாய்ப்புள்ளது. 10 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கும் குரு உங்களுக்கு நிறைய நன்மைகளை செய்வார். நல்ல விஷயங்கள் ஏற்படும். திருமண யோகம் உண்டாகும்.
முன்னேற்றம்
பிள்ளைகள் விஷயத்தில் கோபம் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். தெய்வீக வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். அலர்ஜி, மன வருத்தம் சம்பந்தப்பட்ட வியஷயங்களில் இருந்து வெளியில் வருவீர்கள்.
பணவரவு
அலர்ஜிக்கான நல்ல மருந்துகள் கிடைக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. லாபம், சந்தோஷம், அனுகூலம், அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். தனிப்பட்ட முறையில் உங்கள் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாக்கும். உத்தியோகத்தில் இருந்த சிக்கல் தீரும்.
வழிபாடு
எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். எழுத்துப் பூர்வமான விஷயங்கள், மெட்டீரியலிஸ்டிக்கான விஷயங்களில் பெரிய அளவுக்கு ஏற்றமும், சந்தோஷமும் உண்டாகும். இதெல்லாம் நம் வாழ்க்கையில் நடக்குமா என்று எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் இனி நடக்கும் காலகட்டமாக இருக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். மதுரை மீனாட்சியம்மன் வழிபாடு, முருகர் வழிபாடு அற்புதமான நன்மைகளைத் தரும்.


Click it and Unblock the Notifications
