Rasi Palan This Week: துலாம் ராசிக்கு அடுத்தடுத்து வரும் அதிர்ஷ்டம்.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்
Thulam Rasi Palan: ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் துலாமிற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)
துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பிறர் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு, உங்கள் குடும்பத்தில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். குடும்ப விஷயத்தை மட்டும் சரியாகப் பார்த்துக் கொண்டால் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் அற்புதமான அமைப்பு ஏற்படும்.
சுப காரியம்
தெய்வ அனுக்கிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் நல்ல காரியங்கள், சுப காரியங்கள், தானதர்மங்கள் அதிகளவில் நடக்கும். நிறைய புனித காரியங்களைச் செய்து மகிழ்வீர்கள். தங்கம் வாங்கும் யோகம் உண்டாகும். வெளியூர் பயணம் மேற்கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்புகள் வந்து சேரும்.
திடீர் பண வரவு
எல்லா நல்ல காரியங்களும் உங்களுக்கு அடுத்தடுத்து நடக்கும். அடுத்த 4 மாதங்களுக்குள் வெளிநாடு செல்லும் அமைப்பு ஏற்படும். பஞ்சம ஸ்தானத்தில் ராகு இருப்பதால் உடம்பில் சூடு அதிகரித்து அம்மை வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. அரசு மற்றும் அரசு சார்ந்த தொழில், அரசாங்க உத்தியோகம், அதிகாரிகள் தொடர்பான விஷயங்களில் நன்மைகள் நடக்கும். திடீர் பண வரவுகள், எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள் அமைப்பு உள்ளது.
ஏற்றங்கள்
எதற்காகவும், யாருக்காகவும் பயப்படும் தேவை இருக்காது. பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த அமைப்புகள் எல்லாம் பரிபூரணமாக மாறும். ஏற்றங்கள் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொடர்ச்சியாக இருந்து வந்த மன பாரங்கள் எல்லாம் நீங்கும். உத்தியோகத்தில் அதீதமான ஏற்றத்தைப் பெறுவீர்கள்.
வழிபாடு
செல்வாக்கு அதிகரிக்கக்கூடிய வாரமாக இருக்கும். அற்புதங்கள் ஏற்படும். வண்டி, வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும். முதுகு தண்டுவடம் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பைரவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். துர்க்கை வழிபாடு அனுகூலத்தை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications
