Rasi Palan This Week: 3 கிரகங்களின் அருளால் துலாம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. நினைத்தது நடக்கும்!
Thulam Rasi Palan: மே 4 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் துலாமுக்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், மே 4 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)
துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு சகவலவிதத்தில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறும். உத்தியோகம் ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். கழுத்து, காது, மூக்கு, தொண்டை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பயணம்
வண்டி வாகனங்களை வாங்கும் யோகம் உண்டு. உள்ளூர், வெளியூர் பயணங்கள் ஏற்றத்தைக் கொடுக்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறும் யோகம் உண்டு. யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய நல்ல காலகட்டம். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வண்டி, வாகனங்களில் அனுகூலம் ஏற்படும்.
தடைகள் நீங்கும்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த டென்ஷன்கள் தீரும். நிம்மதியான காலகட்டமாக இருக்கும். தொழில் தடை, உத்தியோக தடை, படிப்பு தடை, வியாபார தடை பரிபூரணமாக நீங்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும். புதன்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நன்மையைத் தரும்.
செல்வாக்கு
எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடைபெறும் காலகட்டம். உத்தியோகம் ரீதியாக தொடர்ச்சியாக இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். சூரியன், புதன், குரு பார்வை இருப்பதால் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பண வரவு அற்புதமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அனுகூலம்
நீங்கள் நினைத்ததெல்லாம் கிடைக்கும் யோகம் உண்டாகும். அரசியல் அதிகாரம், நினைத்த காரியம் நடக்கும். எம்பி சீட், மெடிக்கல் சீட் கிடைக்கும். அஷ்டமத்தில் சுக்கிரன் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். பெண்களிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அடிவயிறு, பின்பகுதியில் சிறிய பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் பார்த்துக் கொள்ள வேண்டும். சகலவிதமான விஷயங்களும் உங்களுக்கு நடக்கும் காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
விஷ்ணு வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். விஷ்ணு காயத்ரியை தினந்தோறும் படிப்பது, கேட்பது நன்மை பயக்கும். வெள்ளிக்கிழமையில் பார்வதி தேவி, மகாலட்சுமி வழிபாடு நன்மையைத் தரும்.












Click it and Unblock the Notifications