Rasi Palan This Week: துலாம் ராசிக்கு 7 நாட்களில் வரப்போகும் குட் நியூஸ்.. தொட்டது எல்லாம் சக்சஸ்
வார ராசி பலன்: டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அதிகளவிலான யோக பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உறவுகளில் மேன்மைகள் ஏற்படும் அற்புதமான காலகட்டம். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் விஷயங்களில் வெற்றிகளைக் காண்பீர்கள். இழுபறியான விஷயங்களில் வெற்றிகளைக் காண்பீர்கள்.
தொழில்
வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர் பெரிய வெற்றியையும், சந்தோஷத்தையும் பெறக்கூடிய காலகட்டம். தொடர்ச்சியாக இருந்து வந்த மன தாங்கல்கள் பணத் தாங்கல்கள் அனைத்தும் நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றிகள் பெறும் யோகம் உண்டாகும்.
கோபம் வேண்டாம்
பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், வியாபாரத்துக்கு உடனிருந்து ஒத்துழைப்பு வழங்குவது மேன்மையைத் தரும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75, 90 வது பாடல்களை தினமும் சொல்லி வருவது பெரிய வெற்றிகளைக் கொடுக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக மாறும்.
வெற்றி மேல் வெற்றி
பெரிய வெற்றிகள் கிடைக்கும். உயர்கல்வி, வெளிநாட்டில் இருப்பவர்கள், புரொபஷராக இருப்பவர்கள், பிரயாணங்களை தொழிலாக வைத்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக கெளரவமான பதவிகள் கிடைக்கும். சந்தோஷம், நிம்மதி ஏற்படும். அரசியலில் பதவி உயர்வுகள் கிடைக்கும். பல், முகம், கண் தொடர்பான விஷயங்கள், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள், கணவராக இருந்தால் மனைவியின் ஆரோக்கியத்தையும், மனைவியாக இருந்தால் கணவரின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருப்பது நல்லது.
வழிபாடு
துர்க்கை வழிபாடு மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். பல், மயக்கம், குறை ரத்த அழுத்தம், அதிக ரத்த அழுத்தம் தொடர்பான விஷயங்களில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. தோல், அலர்ஜி தொடர்பான விஷயங்களில் அதீத கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் தொடப்பான விஷயங்களில் சாதகமான அமைப்பை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications