Rasi Palan This Week: துலாம் ராசிக்கு அடிக்கும் பம்பர் லாட்டரி.. புது வீடு, புது கார் கலக்கப் போறீங்க
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

குரு பகவான் மிதுன ராசியில் வக்கிரமாக இருக்கிறார். கேது சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். சந்திரன் தனது பயணத்தை துலாம் ராசியில் இருந்து தொடங்குகிறார். 4 கிரக சேர்க்கை தனுசு ராசியில் ஏற்படுகிறது. ராகு கும்ப ராசியில் இருக்கிறார். ஜனவரி 12 ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் பிரவேஷம் செய்கிறார். ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து நகர்ந்து மகர ராசிக்குள் நுழைகிறார். ஜனவரி 15 ஆம் தேதி தை மாதம் பிறக்கவுள்ளது.
அந்த வகையில், ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு புதிய வண்டி, புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பாக்கியத்தில் குரு வக்கிரம் பெற்றிருப்பதால் நிறைய பேருக்கு திருமண யோகம் ஏற்படும். உங்கள் வீட்டில் திருமணம், நிச்சயதார்த்துக்கான பேச்சுவார்த்தைகள் முடியும். நிறைய பேருக்கு திருமணம் நடக்கும். மன திருப்தி ஏற்படும்.
குரு பார்வை
4 ஆம் இடத்தில் இருக்கும் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகியவை வரும்போது ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. மார்பகம், நெஞ்சகம் சார்ந்த பிரச்சனைகள், முதுகு தண்டுவட வலி போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. குருவின் பார்வை இருப்பதால் உங்களை யாரும் அசைக்க முடியாது. 3 ஆம் இடத்தில் சந்திரன், புதன் இருப்பது உங்களுக்கு நேர்மறையான விஷயங்களைக் கொடுக்கும்.
முன்னேற்றம்
நிறைய நல்லது நடக்கும் காலகட்டமாக இருக்கும். முக்கியமான ஆவணங்கள், கையெழுத்து, ஒப்பந்தம் போன்றவை முடிவதற்கான வாய்ப்புள்ளது. பொருளாதாரம் ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் கண்டிப்பாக முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.
தடைகள் நீங்கும்
எத்தனை படித்தாலும் மதிப்பெண்கள் மட்டும் மாணவர்களுக்கு வராமல் இருந்திருக்கும். அப்படி படிப்பில் உங்களுக்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். மூன்றாம் இடத்தில் இருந்து 4 ஆம் இடம் நோக்கி நிறைய கிரகங்கள் வருகின்றன. புதிய வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். தாயின் ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் தேவை.
வழிபாடு
5 இல் ராகு இருப்பதால் சமூக வலைதளங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் பாதிப்புகளுக்கு நல்ல மருத்துவம் கிடைக்கும். விற்காத நிலங்கள் கண்டிப்பாக உங்களுக்கு விற்று முடியும். பெருமாள் வழிபாடு முன்னேற்றத்தை தரும். சந்தோஷமும், பொருளாதாரமும் 85 சதவீதம் நன்மைகளைத் தரும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications