Rasi Palan This Week: ஜாவா சுந்தரேஷனாக மாறும் துலாம் ராசி.. பண மழையில் நீச்சலடிக்கப் போறீங்க
வார ராசி பலன்: அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 20 முதல் 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம்
ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்து நிறைவடைந்துள்ளது. அக்டோபர் 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் துணையிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. பிள்ளைகளுடைய படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் அக்கறையுடன் உறுதுணையாக இருப்பது நல்லது. செவ்வாய்க்கிழமையில் தெய்வ வழிபாடு அற்புதத்தை ஏற்படுத்தும். பெருமாள் தாயார் வழிபாடு, அம்பாள் வழிபாடு அற்புதத்தை ஏற்படுத்தும். குலதெய்வ வழிபாடு நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
அனுகூலம்
ஆரோக்கியத்தில் மட்டும் உடற்பயிற்சியை தினந்தோறும் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் அனுகூலம் காணப்படும். அசையும், அசையா பொருள் சேர்க்கை ஆனந்தத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். பணமே இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த துலாம் ராசியினருக்கு பெரிய அளவுக்கு பண வரவு நிச்சயமாக நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
தொழில்
தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்றம் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். தொழில் சார்ந்த விஷயங்களில் அனுகூலம் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்த மனத் தாங்கல்கள் படிப்படியாக குறையும். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடக் கூடிய சூப்பரான காலகட்டமாக இருக்கும்.
சுபகாரியம்
யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக இருந்த தடைகள் தவிடு பொடியாக்க கூடிய அமைப்பு உண்டாகும். சுப காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். சுப விரைய பிராப்தம் உண்டாகும். ஒவ்வாமை பிரச்சனை, குறை ரத்த அழுத்தம், இதயத்தில் பாதிப்பு உள்ளவர்கள், படபடப்பு இருப்பவர்கள் சரியான மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. மருந்து மாத்திரைகளை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.
திருமணம்
துலாம் ராசி பெண்களுக்கு திருமணம் கைகூடும். குரு 9 ஆம் இடத்தில் இருக்கும் காலகட்டமானது அதிசாரமாக இருந்தாலும் நன்மைகளை அள்ளிக் கொடுக்க காத்திருக்கிறார்கள் என்பதால் அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. திருமணத்தை ஆண்கள், பெண்கள் என யாராக இருந்தாலும் அதனைத் தவிர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.












Click it and Unblock the Notifications