Rasi Palan This Week: துலாம் ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டப் போகுது.. உங்க காட்டுல பணமழை தான்
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
துலாம் (Thulam Rasi Palan)
துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல யோக பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில், படிப்பில் அனுகூலமும், மாற்றமும் காணப்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டாகும். தொழிலில், உத்தியோகத்தில், தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் பனிபோல விலகும்.
தடை நீங்கும்
அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடல் படித்து வருவது, கேட்பது பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் இருந்து தடைகள் எல்லாம் நீங்கும். தனிப்பட்ட முறையில் நல்ல அமைப்பு ஏற்படுத்தும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். உள்ளூர், வெளியூர் பயணம் ஏற்படும். தொலைதூரத்தில் ஏற்றம் ஏற்படும்.
யோகம்
யோக பலன்கள் அதிக அளவில் உண்டாகும். அசிடிட்டி, செரிமாணக் கோளாறு, முடிகொட்டுவது, தூக்கமின்மை போன்றவை ஏற்படும். நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். அடுத்தடுத்து யோகம் உண்டாகும். 2 ஆம் இடத்தில் இருக்கும் புதன் அஷ்டம ஸ்தானத்துக்கு பார்வை பலத்தை கொடுப்பதால் தப்பை சரியாகக் கண்டுபிடித்துவிடுவீர்கள். கணவனாக இருந்தால் மனைவிக்கும், மனைவியாக இருந்தால் கணவருக்கும் அடுத்தடுத்து யோகம் ஏற்படும்.
பணவரவு
பணவரவு நன்றாக இருக்கும். காதல் கைகூடும். தாராளமான பேச்சுகள், நா வன்மை, செல்வாக்கு உண்டாகும். எல்லா விஷயங்களும் உயரக்கூடிய வாய்ப்பு ஏற்படும். 3 ஆம் இடத்தில் இருக்கும் கிரகங்களால் தூரபயணம், வெளியூர் பயணம் போன்றவற்றில் தடை, தாமதம் ஏற்படும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகன விபத்துகள், வண்டி பழுதாவது போன்றவை உண்டாகும்.
வழிபாடு
இளைய சகோதரன், இளைய சகோதரி வாழ்க்கையில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. சனியின் பார்வையில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சிக்கியிருப்பதால் பொறுமை மிகவும் அவசியம். கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது, பணம் நன்றாக இருக்கும், பொருளாதாரம் அற்புதமாக இருக்கும். லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications