Rasi Palan This Week: துலாம் ராசி பிரச்சனைகளுக்கு எல்லாம் எண்டு கார்டு.. மகிழ்ச்சி கொட்டும்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு கொடுத்த வாக்கை வீட்டிலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக் கூடிய அற்புதமான காலகட்டம். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய அமைப்பு ஏற்படும்.
பிரச்சனைகள் நீங்கும்
இழுபறியாக இருந்த பிரச்சனைகள் பரிபூரண நிவர்த்தி ஏற்படும். அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். தனிப்பட்ட முறையில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். கொடுத்த வாக்குகளை காப்பாற்றுவீர்கள். இளம் வயது துலாம் ராசியினர் சட்டத்திற்கு மீறி தேவையில்லாத பிரச்சனைகளுக்கு ஆட்பட்டு கெட்ட பெயர் வாங்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
கடன்கள் தீரும்
திட்டமிட்டு கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தொழில் ஏற்றம், உத்தியோக ஏற்றம், வியாபார ஏற்றம், படிப்பு ஏற்றம் என அனுகூலமான அமைப்பு உண்டாகும். பழைய கொடுக்கல், வாங்கல் பிரச்சனை பரிபூரணமாக நிவர்த்தியாகும். வழக்குகளில் வெற்றிகள் காணப்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
ஆரோக்கியம்
நரம்பு, கழுத்து, முதுகு, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனமாக இருப்பது நல்லது. உடற்பயிற்சி செய்வது நன்மையை ஏற்படுத்தும். பெண்களுக்கு அலர்ஜி, ஹார்மோன் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை நிவர்த்தி செய்துவிட்டு முன்னோக்கிச் செல்லும் காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
அனுமன் வழிபாடு நல்ல அனுகூலத்தை ஏற்படுத்தி தரும். அனுமன் சாலிஷா கேட்பது, அனுமன் மந்திரத்தை கேட்பது, படிப்பது மேன்மையை உண்டாக்கும். தொழில் ரீதியாக மேலதிகாரிகளுடன் தர்க்கத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என்று இருந்து கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications