Thulam Rasi Palan: தடைகளை தவிடு பொடியாக்கும் துலாம் ராசி.. தொட்டதெல்லாம் ஹிட்டாகப் போகுது
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்தப் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சியின் நடைபெற்று நிலையில் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். பங்குனி மாதம் பிறந்துள்ள நிலையில் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.

சூரியன் பெயர்ச்சியுடன் பிறக்கும் பங்குனி மாதம் சில ராசியினருக்கு அற்புதமான மாற்றத்தைக் கொடுக்கும். பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம், ஸ்ரீராம நவமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், அனுமன், பெருமாள், ராமருக்கு விசேஷம் நிறைந்த மாதம். இந்த பங்குனி மாதத்தில் துலாம் ராசிக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன் (Thulam rasi palan)
துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு லாபதிபதியான சூரியன் பங்குனி மாதம் முழுவதுமே 6 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். ஏற்கனவே நல்ல பலன்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் சனியுடன் சூரியன் அமர்கிறார். பாவ கிரகங்கள் 6 ஆம் இடத்தில் இருப்பதால் மிகப்பெரிய நன்மை உண்டாகும். தேவையில்லாத விஷயங்கள் எல்லாம் உங்களை விட்டு விலகும். தேவைப்படுவதெல்லாம் நடக்கும் காலகட்டமாக இருக்கும்.
முன்னேற்றம்
3, 6, 10, 11 ஆம் இடத்தில் சூரியன் நன்மைகளைத் தருவார். இதுவரை இருந்து வந்த தடைகள் எல்லாம் பனிபோல விலகக்கூடிய நல்ல காலகட்டம். சில கடன் அமைப்புகள் ஏற்பட்டாலும் அவை வளர்ச்சிக்கான கடன்களாக இருக்கும். நல்ல விஷயங்களுக்கான கடன்களான வீட்டுக் கடன், வாகனக் கடன், இடத்திற்கான
கடன் போன்றவை ஏற்படும். தொழில் நன்றாக இருக்கும். வேலை நன்றாக இருக்கும்.
பதவி உயர்வு
பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய நல்ல காலகட்டம். அரசு ஊழியர்களுக்கு சாதகமான பதில்கள், சம்பள உயர்வுகள் கிடைக்கும். நிர்ப்பந்தத்தால் இந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு, ஷிப்ட்களில் வேலை செய்பவர்களுக்கு எல்லாம் நல்ல வேலை மாற்றம் உண்டாகும். வருகிற மாதங்கள் எல்லாம் கோச்சார ரீதியாக உங்களுக்கு நன்றாக இருக்கும். அதனால் அடிப்படை விஷயங்களில் எந்தவித குறைபாடுகளும் ஏற்படும்.
பணவரவு
பணம் நன்றாக சம்பாதிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் கைகூடும் அமைப்பு உண்டு. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சொந்த வீடு, இடம், வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள், பாதிப்புகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும்.
அனுகூலம்
பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் ஏற்படும். கடன்களை அடைத்து முடிப்பீர்கள். புதிய கடன்களை வாங்கும் யோம் உண்டாகம். முதலீடுகளில் அனுகூலம் ஏற்படும். கடன்களை அடைக்கும் முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். இஷ்ட தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு முன்னேற்றத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். தொட்டது துலங்கும் நல்ல மாதமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications