Thulam: கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. துலாம் ராசிக்கான மே மாத பலன்கள்!
மே மாத ராசி பலன்: 2026 மே மாதம் பிறக்கவுள்ளது. இந்த மே மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். கிரக நிலைகள் ஒவ்வொரு ராசிக்கும் வேறுபட்ட பலன்களை தரும் நிலையில், துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எப்படி அமையும்? எந்த கிரகங்கள் சாதகமாக உள்ளன, எவற்றில் கவனம் தேவை? இதோ மே மாத ரிஷபம் ராசிக்கான கிரக பலன்கள்.

துலாம்
துலாம் ராசியினருக்கு பாக்கியாதிபதி நீச்சத்தில் இருந்து 7 ஆம் இடத்துக்கு மே 1 ஆம் தேதி மாறுகிறார். 11 ஆம் தேதி 7 ஆம் அதிபதியும் ஆட்சியாகி ராசியைப் பாரக்கிறது. ராசிநாதன் 8 இல் மறைந்தாலும் ஆட்சியாக இருக்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் குருவும், சுக்கிரனும் வலிமையாக இருக்கின்றனர். துலாம் ராசிக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு அற்புதமான அமைப்பு ஏற்படும்.
காதல் மலரும்
பெண்களுக்கு மிகப்பெரிய நல்ல மாதமாக இருக்கும். வேலை, தொழிலில் கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கு, கும்பத்திலும் கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கு அந்த நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். குழந்தைகள் உங்கள் சொல் பேச்சை கேட்கும் காலகட்டமாக இருக்கும். இளைஞர்களுக்கு காதல் வரக்கூடிய மாதமாக இருக்கும். காதல் வாழ்ககை இனிக்கும்.
வருமானம் பெருகும்
8 இல் சுக்கிரன் ஆட்சி, 7 ஆம் இடத்தில் செவ்வாய் ஆட்சி என்கிற அமைப்பு மனைவி, நண்பர்கள், காதலர்களிடம், கணவரிடம் ஏதாவது கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களுடன் இணக்கமாகச் செல்வீர்கள். சிலருக்கு புதிய காதலன், காதலி கிடைப்பார்கள். அவர்களுக்கு செலவு செய்யக்கூடிய அமைப்பு, அதற்கான வருமானங்கள் கிடைக்கும் யோகம் உண்டு.
அனுகூலம்
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வியாபாரம், தொழில் நன்றாக இருக்கும். அந்தஸ்து, கெளரவம் ஏற்படும். நிறைய பேர் கூடும் இடத்தில் நன்றாக உடை அணிந்து கொண்டு நீட்டாக செல்லும் அமைப்பு ஏற்படும். மிகப்பெரிய அளவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கையில் காசு, பணம் வரக்கூடிய அமைப்பு உள்ளது. சம்பள உயர்வு கிடைக்கும்.
தொழில்
எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வேலை போனவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வேலையை விட்டுவிட்டு தொழில் செய்யும் அமைப்பு உள்ளது. வயதுக்கு ஏற்றாற்போல எல்லா தரப்பினருக்கும் தொட்டது துலங்கக்கூடிய நல்ல மாதமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications