Rasi Palan This Week: புது வீடு, நிலம், கார்.. புது தொழில்.. துலாம் ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்
Thulam Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த வாரம் முக்கியமான வாரம். வாழ்வில் முன்னேற்றம் பெற தை அமாவாசை தினமான இன்று முன்னோர்களை வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். பசு மாடுகளை தானமாக அளிக்கலாம். 19 ஆம் தேதி புண்ணிய நதிகளில் நீராடுவதால் கர்மாவுக்கான கடன்கள் நிவர்த்தியாகும். 25 ஆம் தேதி ரதசப்தமி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சூரிய பகவானை வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
இந்த வாரம் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சியான புதன் பெயர்ச்சி நடைபெறுகிறது. தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு புதன் பெயர்ச்சியாகிறார். அந்த வகையில் இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)
துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிதாக தொழில் தொடங்குவீர்கள். டாக்குமென்டேஷன் செய்வது, கையெழுத்து போடுவது, கணக்கு பார்ப்பது என இதுவரை தள்ளிப்போன விஷயங்களை எல்லாம் அடுத்தடுத்து முடிப்பீர்கள். எல்லா விஷயங்களையும் திட்டமிட்டு முடிப்பீர்கள். காத்துக் கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் இனி நடக்கும்.
திட்டமிடல்
எந்தவித தவறையும் செய்யாமல் இனி திட்டமிட்டு காரியங்களை செய்து முடிப்பீர்கள். மறந்தும் தவறு செய்யாமல் இருப்பீர்கள். பாக்கிய ஸ்தானத்தில் குரு இருப்பதால் அற்புதமான யோகம் ஏற்படும். நிறைய பேருக்கு திருமணமாகும் யோகம் உண்டாகும். நண்பர்கள் மூலமாக நல்லவை அனைத்தும் நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
சுபகாரியம்
தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுபகாரிய அமைப்பு உண்டாகும். வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சனி அடுத்த 2 வருடத்திற்கு 6 ஆம் வீட்டில் இருப்பதால் கஷ்டங்கள் நீங்கும். தொடர்ச்சியாகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்களுடைய முடிவுகளை மற்றவர்கள் பாராட்டக்கூடிய சூழல் ஏற்படும். சுப காரியங்கள் அனைத்தும் நடக்கும்.
பணவரவு
பணவரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். செல்வாக்கு கூடும் அற்புதமான காலகட்டம். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். சுபகாரியத் தடைகள் நீங்கும். நிம்மதியான தூக்கம், பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும்.
வழிபாடு
பசு மாடுகளுக்கு உணவளிப்பது விரயங்கள் அனைத்தையும் சுப விரயமாக மாற்றும். தொற்று நோய் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பற்களில் வரும் பிரச்சனைகளுக்கு உரிய மருத்துவம் பெறுவது நன்மை பயக்கும். நவக்கிரகத்தில் இருக்கும் குரு வழிபாடு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications