Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வார ராசி பலன்: துலாம் ராசிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாகும் யோகம்.. என்ஜாய்

Subscribe to Oneindia Tamil

Thulam Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

thulam-rasi-palan-what-kind-of-benefits-will-get-thulam-rasi-people-from-feb-9-to-15

கிரக நிலைகள்

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் நிறைவடைந்து பிப்ரவரி 13 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. சூரியன் கும்பத்திற்கு பிரவேஷம் ஆகிறார். சூரியன், புதன், சுக்கிரன், ராகு, திரிகோணத்தில் குரு வக்கிரமாக அமர்கிறார். இந்த 4 கிரகங்கள் சேருவது நல்லது இல்லை. அதுவும், புதனும் ராகுவும், சுக்கிரனும் ராகுவும், சூரியனும் ராகுவும் சேருவது மோசமான நிலையாகும். இப்போது 4 கிரகங்களும் சேருவது பொதுவாக நன்மையைத் தராது. சனியின் வீட்டில் 4 கிரகங்கள் இருந்தாலும் குருவின் பார்வை பலத்தால் இருப்பதால் சிறு சிறு பிரச்சனைகள் நீங்கும்.

இந்த வார ராசி பலன்

சிங்கப்பூர், சிவகங்கை, தேவக்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கோயில்களில் தீ விபத்து, அசம்பாவிதங்கள், சிலிண்டர் வெடிப்பது, அரசியல் கட்டடங்களில் தாக்குதல், விமான விபத்து போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கலை உலகம் சார்ந்த நபரின் உயிரிழப்பு ஏற்படும். இந்த வாரத்தில் மகரம், ரிஷபம், கன்னி ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)

துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு 4 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் வீடு வாங்குவது, நிலம் வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும். அரசுத் துறை குவாட்டர்ஸ், அரசு வேலை, மருத்துவர்கள் நன்மைகள் கிடைப்பது, இடம் அமைவது போன்ற யோகம் உண்டாகும். பஞ்சம ஸ்தானத்தில் கிரகங்கள் இருப்பதால் பெரிய அரசியல்வாதிகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படும்.

ஆரோக்கியம்

பெரிய ஆட்களைத் தொடர்பு கொள்வீர்கள். அதன் மூலம் நன்மைகள் உண்டாகும். எந்தவித பெரிய கவலைகளும் ஏற்படாது. ரத்த பந்த உறவுகள், தாத்தா பாட்டியின் ஆரோக்கியம், மூத்தவர்களின் ஆரோக்கியத்தை கவனத்துடன் பார்த்துக் கொள்வது நல்லது. குரு வக்கிரமாக இருக்கும் வரை எல்லாமே சாதகமாக நடக்கும். குரு வக்கிர நிவர்த்தியான பின்பு இன்னும் நன்றாக இருக்கும்.

சுபவிஷயம்

இந்த காலகட்டத்தில் வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பது சரியாக இருக்காது. மூத்தவர்களுக்கு அடிபடும் வாய்ப்புள்ளது. சந்தோஷம் 70 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதம் நன்றாக இருக்கும். சுப்பிரமணியர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும். சுப விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கும்.

பயணங்களால் ஆதாயம்

பிள்ளைகளுக்காக உள்ளூர் பயணம், வெளியூர் பயணம் மேற்கொள்ளும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நிறைய விஷயங்களில் இருந்து வந்த மனம் சார்ந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும். ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். தொழில் ரீதியாக அனுகூலங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் அற்புதமான ஏற்றத்தையும், நம்பிக்கையையும் பெறுவீர்கள். பெற்றோர், பெரியோர், சுபகாரியங்கள், சுப விஷயங்கள், இசை, சினிமா போன்ற விஷயங்கள் எல்லாம் முன்னேற்றத்தைக் கொடுக்கும்

வழிபாடு

முதுகுத் தண்டுவடம், மறைமுக ஸ்தானப் பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். அபிராமி அந்தாதியில் உள்ள 40, 59, 75 ஆவது பாடல்களைப் படிப்பது, கேட்பது நன்மையைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+