Rasi Palan This Week: புது வீடு, புது காரு கலக்கப்போகும் துலாம் ராசி.. தொழிலில் அதிர்ஷ்டம் நிச்சயம்
Simmam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)
துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் மாறும். தடைபட்டுக் கொண்டே இருந்த விஷயங்கள் அனைத்தும் இனி அடுத்தடுத்து நடக்கும். எதிரிகள் விஷயத்தில் வெற்றிகள் ஏற்படும். உறவினர்கள், ரத்த பந்த உறவுகளுடன் வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்ளக் கூடிய துலாம் ராசியினருக்கு ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும்.
தொழிலில் ஏற்றம்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் அனுகூலம் ஏற்படும். நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். ரத்தத்தில் பரவும் நோய் பாதிப்புகள், ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். துணையிடம் மனம் விட்டுப் பேசுவது ஏற்றத்தைத் தரும். பிள்ளைகள் விஷயத்தில் யோக பலன்கள் கிடைக்கும்.
அனுகூலம்
பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த தேவையில்லாத மனத் தாங்கல்கள், கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, புதிய முயற்சிகளில் அனுகூலமான அமைப்பு ஏற்படும். முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த மனம் சார்ந்த பிரச்சனைகள், பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரக்கூடிய நல்ல காலகட்டம்.
வீடு கட்டும் யோகம்
வீடு கட்டுவது, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். நிலப் பிரச்சனைகள், தாய் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும். வீட்டுக்குள் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். குரு வக்கிரமாக இருப்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். எடுத்த அனைத்து காரியங்களும் ஏற்றக்கூடிய அற்புதமான காலகட்டம். வாகனம் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் உண்டாகும்.
ஏற்றம்
வீட்டில் பெரியவர்கள் இருப்பின் அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 70 சதவீதம் ஏற்றம் உண்டாகும்.
-
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications