Rasi Palan This Week: துலாம் ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம்
Thulam Rasi Palan: மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)
துலாம் ராசியினருக்கு துலாம் ராசியினருக்கு வயிறு, முதுகு, தோல் அலர்ஜி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும். பெற்றோர், பெரியோரின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உறவுமுறையில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். அதிகளவிலான யோக பலன்கள் கிடைக்கும். வயிறு, முதுகு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்
பகை உருவாகும். வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். வேலை பார்க்கக்கூடிய இடத்தில் தேவையில்லாத சங்கடங்கள் ஏற்படும். உங்களைப் பற்றி தேவையில்லாம் தவறாக சொல்லிக் கொடுப்பார்கள். கடன் தொல்லைகளால் அவதி ஏற்படும். சித்தி அல்லது அத்தைக்கு அறுவை சிகிச்சை, எழும்பு முறிவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
குரு அருள்
பாக்கியத்தில் குரு இருப்பதால் உங்களை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது. ராசிநாதனே 7 ஆம் இடத்தில் இருப்பதால் பெரிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பகையை மட்டும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இந்த காலகட்டத்தில் பொறுமையாக இருப்பது நல்லது. குருமார்கள் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் 80 சதவீதமும், பொருளாதாரம் 80 சதவீதமும் நன்றாக இருக்கும்.
வழிபாடு
6 இல் சனி, சூரியன், செவ்வாய் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையீடு, பிறர் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். மாற்றங்கள், நல்ல விஷயங்களை உடனடியாக முடித்துக் கொள்வது நல்லது. அங்காரகன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications