Rasi Palan This Week: சொல்லி அடிக்கும் துலாம் ராசி.. பண வரவு சும்மா கொட்டப் போகுது
Thulam Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். [Thulam rasi palan]

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)
துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு எல்லா விதமான நன்மைகளும், எல்லா விதமான சந்தோஷங்களும் ஏற்படும். நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய ராகு வழிபாடு ஏற்றத்தைத் தரும். வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. புதிய பொறுப்புகளுக்கு வரும் யோகம் உண்டாகும்.
யோக பலன்கள்
யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். புதிய கெளரவங்கள் ஏற்படும். அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். இடமாற்றம், உத்தியோக மாற்றம், படிப்பு மாற்றம், வியாபார மாற்றம், தொழில் மாற்றம் உண்டாகும். தனிப்பட்ட தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். ஆச்சரியாமான முன்னேற்றங்கள் ஏற்படும்.
பிரச்சனை தீரும்
உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் என்பதால் மனதில் இருந்து சங்கடங்கள் எல்லாம் நீங்கும். வியாபாரத்தில் பெரிய சாதனைகளை படைப்பீர்கள். கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடக்கும் காலகட்டம். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். மகிழ்ச்சி பெருகும்.
வெளியூர் யோகம்
கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் பெருகும். வண்டி, வாகனத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அற்புதமான காலகட்டம் தொடங்கவுள்ளது. எங்கே சென்றாலும் ராஜமரியாதை கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். மன நம்பிக்கை அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படும். வெளியூர், வெளிநாடு பிராயணங்கள் உண்டாகும்.
யோகம்
திட்டமிட்ட காரியங்களில் சொல்லி அடிப்பீர்கள். ஆந்திரா, மேற்கு வங்கம், ஜப்பான் செல்லும் யோகம் உண்டாகும். 12 ஆம் தேதி குட்நியூஸ் வந்து சேரும். வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய விஷயங்களை செய்து முடிப்பீர்கள். காத்திருந்த விஷயங்கள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுக்காக கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது.
பொறுப்புகள் கூடும்
பொறுப்புகள் அதிகரிக்கும். அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும். பெரிய பொறுப்புகள் கிடைக்கும். நீங்கள் எதை நினைத்தாலும் முடிக்கும் யோகம் உண்டாகும். விரோதமான எண்ணங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். பாக்கியத்தில் இருக்கக்கூடிய குரு ஏராளமான நல்ல விஷயங்களைச் செய்வார்.
வழிபாடு
குரு நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் செய்து வெளியில் செல்லும்போது இடமாற்றம், வேலை மாற்றம், சொந்த தொழில் செய்யும் யோகம் உண்டாகும். சந்தோஷம் 70 சதவீதமும், பொருளாத ஏற்றம் 90 சதவீதம் நன்றாக இருக்கும். ஸ்ரீ கிருஷ்ண பகவான் வழிபாடு முன்னேற்றத்தைத் தரும்.












Click it and Unblock the Notifications