Thulam: துலாம் ராசிக்கு இந்த மாதம் Increment நிச்சயம்.. ஆகஸ்ட் மாதத்தில் வரும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

ஆகஸ்ட் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. பித்ருக்களான தர்ப்பணங்களை இந்த நாளில் செய்வது நன்மையைத் தரும். ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு மேல் ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைப்பது நன்மை பயக்கும். ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆவணி அவிட்டம் வருகிறது. இந்த நாளில் கல்வியைத் தொடங்குவது ஏற்றத்தைத் தரும்.

thulam-rasi-palan-what-kind-of-benifts-will-get-thulam-rasi-people-in-this-august-month

பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் வலுவிலந்து காணப்படுவதால் வண்டி, வாகனங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறு பிள்ளைகளுக்கு பிரச்சனையாக இருப்பது நல்லது. குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகள் கவனமாக இருப்பது நல்லது. அந்த வகையில், துலாம் ராசியினருக்கு இந்த மாதம் எப்படி அமையும் என்று பார்க்கலாம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பெண்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதத்தில் பண வரவு அற்புதமாக இருக்கும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற எண்ணங்கள் தோன்றும். பெரிய அளவில் நிறைய விஷயங்களை செய்வதற்கு முயற்சி செய்வீர்கள். அப்பாவின் தொழிலை எடுத்து முன்னின்று செய்வீர்கள். அம்மாவின் ஆரோக்கியம் கெடுவதற்கான வாய்ப்புள்ளது. சகோதர, சகோதரிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள், மன கசப்புகள் நீங்கும்.

முன்னேற்றம்

திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். படிப்பு தொடர்பான விஷயங்களை ஃப்ரீலான்ஸ் முறையில் செய்யும் மாதம். டெட் போன்ற அரசுத் துறைகளில் வெற்றி பெறக்கூடிய காலகட்டம். பிஹெச்டி, முனைவர் பட்டம் போன்றவற்றுக்கான தீசிஸ் நல்லபடியாக முடிக்கும் அமைப்பு உள்ளது. வங்கி, நிதி, ஆடிட்டிங் துறைகளில் வெற்றி பெறுவது, தேர்ச்சி பெறுவது போன்ற யோகம் உண்டாகும்.

வெளிநாட்டு யோகம்

வெளிநாட்டு யோகம் பெரிய அளவில் உங்களுக்கு சாதகமாக இல்லை. வெளிமாநில யோமும் இல்லாததால் அதற்கான முயற்சிகளை செய்யாமல் இருப்பது நன்மை பயக்கும். மகாலட்சுமி தாயார், பெருமாள் வழிபாடு செய்வது, வெள்ளை நிற வாசனை நிறைந்த பூக்களை படைத்து வழிபாடு செய்வது நன்மை பயக்கும். பிங்க் நிறம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பச்சை நிறத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்

எள்ளு, கருப்பட்டி, நல்லெண்ணையை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். புதன்கிழமை மற்றும் சனிக்கிழமையில் அசைவம் சாப்பிடுவதைத் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வெள்ளை மொச்சையை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது, தானமாக கொடுப்பது சகலவித முன்னேற்றத்தையும் தரும். 10க்கு 9 என்ற மதிப்பெண்ணில் நல்லவை நடக்கும் அற்புத மாதமாக இந்த ஆகஸ்ட் மாதம் அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+