துலாம் ராசிக்கு வக்கிர சனியிலும் கொட்டும் அதிர்ஷ்டம்.. அடடே தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம்.. என்ஜாய்

Subscribe to Oneindia Tamil

சனி வக்ர பெயர்ச்சி: ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரப் பெயர்ச்சி அடைவதால் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

சனி வக்கிரம்

ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரம் அடைகிறார். வக்கிரம் என்பது தன்னுடைய இழத்தல் என்பது பொருளாகும். இந்த காலகட்டத்தில் சனி செயலிழந்து போகும். வருடகிரகங்களான குருவும், சனியும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிரமாகும். 9 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிர நிவர்த்தியாவதும் வழக்கம். சனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் இருக்கும் காலகட்டம் என்று பார்க்கும்போது இரண்டு முதல் மூன்று வரை வக்கிரமாகும்.

thulam-sani-vakra-peyarchi-2025-lets-see-what-kind-of-benefits-will-get-thulam-rasi-people-during

காயத்ரி மந்திரம்

சனி வக்கிரமாவதால் அதனுடைய செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படும். சனி ஆயுள் காரகன், கர்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார். வக்கிர கதியில் சனி இருக்கும்போது சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். சனியிடமிருந்து தப்பிக்க சனி காயத்ரி மந்திரத்தை கூறுவது, கேட்பது அற்புதமான பலன்களைத் தரும். ஒருநாளைக்கு இந்த மந்திரத்தை 8 முறை ஜெபிப்பது பல்வேறு பாதிப்புகளில் இருந்து உங்களைக் காக்கும்.

இந்த சனி வக்கிரமானது பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் வக்கிரகதி ஆரம்பிக்கிறது. கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி வக்கிர நிவர்த்தியடைகிறார். இந்த சனி வக்கிரப் பெயர்ச்சியாகும் போது துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி பலன்

சித்திரை, சுவாதி, விசாகம் ஆகிய 3 நட்சத்திரம் 9 பாதங்களைக் கொண்டது துலாம் ராசி. ராசியின் அதிபதி சுக்கிர பகவான். உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தில் சனி பகவான் வக்ர கதியில் இருக்கிறார். ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரை சனி பகவான் வக்கிரகதியில் போவார். இந்த காலகட்டத்தில் தந்தையின் மூலமாக அனுகூலம் ஏற்படும்.

ஏற்றம்

முதல் ஒன்றரை மாதத்தில் புகழ், கெளரவம், அந்தஸ்து உயரும் வாய்ப்புள்ளது. வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளது. சனி பகவானை கர்மக்காரகன், ஆயுள் காரகன் என்று அழைக்கப்படுகிறார். 5 ஆம் இடத்தில் சனி பகவான் வக்கிரகதி அடைவதாலும், குரு பகவான் பார்ப்பதாலும் தாய், தந்தை, மூதாதையர் செய்யும் தொழில் செய்பவர்களாக இருந்தால் அதில் மிகப்பெரிய ஏற்றம் பெறுவீர்கள்.

வெற்றி வாய்ப்பு

எதிர்பாலினத்தவர்களால் வெற்றி வாய்ப்பு ஏற்படும். கூட்டுத் தொழிலில் பெரிய ஏற்றம் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். தொழில் ஏற்றம் உண்டாகும். மறைமுக வருமானங்கள் இருக்கக்கூடிய காலமாக இருக்கும். சமசப்தமான மேஷத்தை சனி பார்ப்பதால் கூட்டுத் தொழிலில் சிறு மாறுதல்கள் ஏற்படும். வக்கிர சனி 11 ஆம் இடத்தைப் பார்ப்பதால் அதிகளவிலான ஏற்றங்கள், தொழிலில் அபரிமிதமான மாற்றம் முன்னேற்றம் ஏற்படும்.

ஆதாயம்

பண வரவு அதிகரிக்கும். தொழிலில் நல்ல ஆதாயத்தைக் காண்பீர்கள். வேலையாட்களால் சிறு சிறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள், அவர்களுக்கு செலவு செய்யும் சூழல் ஏற்படும். 2 ஆம் இடமான தன ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பண வரவில் சில பிரச்சனைகள் இருந்தாலும் கண்டிப்பாக பணம் வரும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் பிரச்சனைகள் வந்து போகும்.

பதவி உயர்வு

வக்கிர சனியிலும் ஏற்றம் பெறும் காலகட்டமாக உங்களுக்கு இருக்கும். பதவி உயர்வுகள், இடமாற்றம் கிடைக்கும். ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் உங்கள் ராசிக்கு மறைந்திருந்து பொருள் ஈட்டும் வாய்ப்புள்ளது. இரும்பு, கலைத் துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் சனியின் பார்வை 7 ஆம் இடத்தில் இருப்பதால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

வழிபாடு, பரிகாரம்

எடுத்த காரியங்களில் வெற்றியடையும் காலகட்டமாக இருக்கும். படிக்கும் மாணவர்கள் புகழ்பெறும் காலகட்டமாக இருக்கும். பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள சனி பகவானை வழிபாடு செய்து வருவது நன்மை பயக்கும். நவக்கிரகத்தில் இருக்கும் சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் எள் தீபம் போடுவது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+