வைகாசி மாத ராசி பலன் 2021: இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் ஆரோக்கியம் அற்புதம்
ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய இம்மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: வைகாசி மாதம் பிறந்து விட்டது. ரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய ரிஷபத்தில் அதாவது, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலமே வைகாசி மாதம். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய இம்மாதத்தில் குளிர்ந்த தண்ணீரில் நீராடல் பூரணத்வமானது என விஷ்ணு ஸ்மிருதி சிறப்பாகக் கூறுகிறது. சிறப்பான இந்த மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்றும், வைசாகம் என்றும் அழைப்பார்கள். வேதம், புராணம் ஆகியவை போற்றுகின்ற மாதம் வைகாசி! பூமியில் படுத்துறங்குதல், பிரம்மச்சரியம், விழிப்புடன் இருத்தல் ஆகிய மூன்றும் வைகாசி மாதத்தின் "மாதவம்' என்றும் வடமொழி நூல்கள் கூறுகின்றன. சித்திரை மற்றும் கத்திரிக்காக தள்ளிப்போடப்பட்ட நல்ல நிகழ்ச்சிகளை வைகாசி மாதத்தில் செய்பவர்களும் உண்டு. சுகபோகத்தைத் தரும் சுக்கிரனின் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது என்பதால் இந்த மாதத்தில் தங்கள் வீட்டு விசேஷங்களை நடத்துவதில் ஆர்வம் செலுத்தினர் நம் முன்னோர்கள். வசந்தத்தை அள்ளி வழங்கும் வைகாசி மாதத்தில்தான் கோயில்களில் வசந்த உற்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. முருகனின் அவதார தினமான வைகாசி விசாகம் உள்ளதால், முருகன் உறையும் ஆறுபடை வீடுகளும் மற்றுமுள்ள அத்தனை முருகத் தலங்களிலும் விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். பல்வேறு சிறப்புகள் கொண்ட வைகாசி மாத ராசி பலன்களை தெரிந்து கொள்வோம்.
வைகாசி மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷப ராசியில் சூரியன், புதன், சுக்கிரன், ராகு, மிதுன ராசியில் செவ்வாய், விருச்சிகத்தில் கேது, மகர ராசியில் சனி, கும்ப ராசியில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. 9ஆம் தேதி சனி வக்ர ஆரம்பமாகிறது 12ஆம் தேதி புதன் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். 14ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 15ஆம் தேதி புதன் வக்ர ஆரம்பமாகிறது. 19ஆம் தேதி புதன் மீண்டும் வக்ர நிலையில் ராசிக்கு திரும்புகிறார். மிதுன ராசியில் உள்ள செவ்வாய் 19ஆம் தேதி கடக ராசியில் நீச்சமடைகிறார்.

மேஷம்
வைகாசி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன் இரண்டாம் வீட்டிற்கு பயணம் செய்கிறார். குடும்ப ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் கூடியுள்ளன. உடலில் இருந்த நோய் பாதிப்புகள் நீங்கும். ஆரோக்கியம் அழகு அதிகரிக்கும். சுக்கிரன் சாதகமாக பயணம் செய்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் உதவி கிடைக்கும். திருமணமான தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் திருமணம் விசயமாக பேசலாம். மாத பிற்பகுதியில் செவ்வாய் 4ஆம் வீட்டில் சனியின் பார்வையில் நீசமடைகிறார். தொற்று நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளவும். வேலை செய்யும் இடத்தில் பொறுமை தேவை. சனிபகவானின் வக்ர சஞ்சாரம் காரணமாக வேலையில் கவனம் தேவை. குருவின் சஞ்சாரம் சாதமாக உள்ளது. வேலை விசயமாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் கடுமை அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. புதன்கிழமைகளில் சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள். துவரம்பருப்பு தானமாக கொடுங்கள்.

ரிஷபம்
சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார். ராசியில் நான்கு கிரகங்கள் பயணம் செய்கின்றன. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. முன்கோபத்தை குறைக்கவும் திட்டமிட்டு வேலை செய்யவும். உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் நிம்மதி உண்டு. சவால்களில் ஜெயித்து காட்டுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. வண்டி வாகன வசதி ஏற்படும். குடும்பம் குதூகலமாக இருக்கும். செவ்வாய் சஞ்சாரம் இந்த மாதம் சாதகமாக இருப்பதால் வீடு மனை வாங்கலாம் சாதகமாக உள்ளது. குரு பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகள் பேச்சை கேட்டு நடக்கவும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் வரும். வெற்றிகள் தேடி வரும் மாதமாக அமைந்துள்ளது. சுக்கிரன் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் வலி உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் நண்பர்களினால் நன்மை உண்டாகும். நரசிம்மர் ஜெயந்தி நாளில் எலுமிச்சை நாட்டுச்சர்க்கரை சேர்த்த பானகம் செய்து வைத்து வணங்குக்கள்

மிதுனம்
வைகாசி மாதம் வெற்றிகரமான மாதமாக அமைந்துள்ளது. திடீர் செலவுகள் வரும். கடன் தொந்தரவுகள் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசியை விட்டு விலகி இரண்டாம் வீட்டிற்கு மாறுகிறார். குடும்பத்தில் நிம்மதி சந்தோஷம் ஏற்படும். குருவின் பார்வையால் எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிப்பீர்கள். அஷ்டமத்து சனியால் மறதிகள் அதிகம் இருக்கும். தங்க நகைகளை பத்திரமாக வைத்திருங்கள். மருத்துவ செலவுகள் வரலாம் உணவுக்கட்டுப்பாடுகள் தேவை. நேரம் தவறி சாப்பிட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன விவாதங்கள் வரலாம் கவனம் தேவை. வியாபாரம் மந்த நிலையில் இருக்கும். பிள்ளைகளால் செலவுகள் வரும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் விரயங்கள் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மருத்துவச் செலவுகள் ஏற்படும். ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்குங்கள். ஆரோக்கியம் குன்றியவர்களுக்கு மாதுளம் பலம் தானமான கொடுங்கள்.

கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே. வைகாசி மாதத்தில் உங்களின் லாப ஸ்தானம் வலுவடைந்துள்ளது. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் கவலைகள் நீங்கும். எதையும் சமாளிக்கும் தைரியம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கண்டகச்சனி நடைபெறுகிறது. சனி வக்ரமடைவதால் சில பிரச்சினைகள் வரலாம். செவ்வாய் உங்கள் ராசிக்கு வந்து அமர்கிறார். சனி செவ்வாய் பார்வை கிடைப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். வேலை செய்யும் இடத்தில் சில சவால்கள் வரும் சமாளிப்பீர்கள். பிள்ளைகளால் சில செலவுகள் வரும். இந்த மாதம் ஞாயிறு கிழமைகளில் பைரவரை வணங்குங்கள். வளர்ச்சி அதிகரிக்கும். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் மனதில் நினைப்பது நடக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கடன்கள் எல்லாம் திரும்ப செலுத்திவிடுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் பதவி புகழ் கௌரவம் அதிகரிக்கும். அதிகார பதவி கிடைக்கும். சுக்கிரன் புதன் சாதகமாக பயணம் செய்கிறார் வீடு மனை வாங்கலாம். பிள்ளைகள் உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகள் மூலம் நன்மை உண்டாகும், லாபம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சகோதரர்களுக்குள் பேச்சுவார்த்தையில் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். சவால்களை நீங்கள் ஜெயித்து காட்டுவீர்கள். வீடு இடமாற்றம் ஏற்படும். வண்டி வாகனம் வாங்கலாம். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை செப்பனிட்டுக் கொள்வீர்கள். மாற்று திறனாளிகளுக்கு உதவுங்கள். அன்னதானம் செய்யுங்கள். ஞாயிறு கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்து வணங்க நன்மைகள் நடைபெறும்.

கன்னி
சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரையாக செய்து வரும் தொழிலில் மேன்மை நிலையை அடையும், தொழில் உத்தியோகம் நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் சாதமாக பயணம் செய்கிறார். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பழைய கடன்களைக் கொடுப்பீர்கள். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் வாங்கி விற்கும் தொழில் சிறப்படையும், எல்லா செயல்களும் சிறப்படையும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்லும் நிலை உண்டாகும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கல்லூரி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் மாத பிற்பகுதியில் வியாபாரம் விருத்தியடையும். சனி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். சனி இந்த மாதம் வக்ரமடைவதால் பிள்ளைகளில் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பழைய சொந்த பந்தங்களினால் உதவி கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வ வழிபாடு நன்மையைத் தரும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்வீர்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications